பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலோன் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார். ”கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்” என்று மஸ்க் கூறினார். அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5% வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன. 17.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வாக்களிப்பில் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் மேற்கொண்ட சில தீர்மானங்கள் பல்வேறு தரப்பினரையும், போட்டி சமூக ஊடக நிறுவனங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்த நிலையிலேயே, மஸ்க் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தார். கருத்துக்…
Author: admin
இலங்கையிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை வழங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதுடன். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் 16.1 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகளின் யன்னல்கள் உடைந்து சிதறின. வீட்டிலிருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.
எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும். இந்த நிலையில், அனுரதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளை ஏற்றிச் செல்ல பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை – முறிகண்டி இடையே மாத்திரம் பயணிக்கும் யாழ்ராணி ரயில், குறித்த ஐந்து மாத காலப்பகுதியில் வவுனியா வரை சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாட்டை பாடசாலை குழுவொன்றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் மக்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து நடத்தப்படும் நிகழ்வுகளை முன்னிட்டு இந்த விசேட ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, தாமரைக் கோபுரத்தை அண்மித்து நடைபெறும் நிகழ்வுகளை பார்வையிடுவதற்காக வருகை தரும் பொதுமக்கள் தமது வாகனங்களை, கபிதாவத்தை கோவில் வாகன நிறுத்துமிடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம் முதல் ரீகல் வரையான வீதியின் இரு மருங்கிலும் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் நிறுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகளை அண்மித்து நடைத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் பொது மக்கள் தமது வாகனங்களை, காலி முகத்திடல் மத்திய வீதி வாகன நிறுத்துமிடம் மற்றும் புதிய பாலதக்ஷ மாவத்தை வாகன…