கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்… அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும் மட்டக்களப்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – பி.ப. 2.00…
Author: admin
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன. இந்தப் போட்டியில் இதில் ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி 3ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெசி அழகான கோலாக மாற்றினார். ஆர்ஜென்டினாவின் மரியா 36ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பெற்று முதல் பாதியிலேயே ஆர்ஜென்டினா ஆதிக்கம் பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé 80 மற்றும் 81ஆவது நிமிடங்களில் அபாரமான இரு கோல்களைப் பெற்று மீண்டும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்களைப் பெற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இதில், ஆர்ஜென்டினா அணியின்…
தெஹிவளை ரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்களும் யுவதியொருவரும் ரயிலில் மோதி படுகாயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ரொஷான் ரந்திக விஜேசிங்க, வயது (22) மற்றும் அம்பலாங்கொட வடுமுல்லவைச் சேர்ந்த சமந்தியா வாசம், தெரினி லக்மி (22) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பலப்பிட்டி தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 12 பேர் தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட ரயிலில் வந்து தெஹிவளை ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும், இவர்களில் மூவர் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் ரயில் மேடையில் இருந்து இறங்கி ரயில் பாதையைக் கடந்து பஸ்ஸில் ஏற முயன்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில் முதல் வெற்றியினை தம்புள்ளை ஓரா அணி பதிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 179 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் – மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை மீட்பதற்காக கடற்படையின் 4 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். அனர்த்ததுக்குள்ளான குறித்த படகில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் அங்கு விரைந்துள்ள நிலையில், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் இன்று மின்வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவர் தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற சிட்னி நீதவான் நீதிமன்ற நீதிபதி கிளாரி பெர்னான் அனுமதி அளித்துள்ளார். தனுஷ்க குணதிலக்க நேற்று (16) நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே அவர் சார்பில் நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். குணதிலக்கவுக்கு உதவ முன்வந்த ஒருவரின் வீட்டில் வசிப்பதால் குணதிலகாவை புதிய வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார். அந்தக் கோரிக்கையை பரிசீலித்த சிட்னி நீதவான் நீதிமன்றம், குணதிலக்கவை புதிய வீடொன்றில் குடியேற அனுமதித்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இலங்கையில் உள்ள 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வேறு நாடுகளில் உள்ள சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள் வழங்கும் அதிக சம்பளம் மற்றும் வசதிகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமை காரணமாக இலங்கையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும் காணப்படும் பொதுவான பிரச்சினையாக உள்ளது என்றார். எனினும், 25 புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தர் பிரிவு ஒன்றில் 05 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்ட மற்றும் அமைச்சுக்களின் மேல்முறையீட்டு வாரியங்களில் இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணங்களைக் கொண்ட அலுவலர்களைத் தவிர, 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்வது கட்டாயம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அடுத்த வருடம் 31 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வருடாந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் இன்னும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்தால் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்குமாறும் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
களுத்துறை-கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸுக்காக காத்திருந்த நபரை சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.