Author: admin

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளரான தினேஸ் ஷாப்டரின் மரணத்துக்கு நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருக்கலாமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல், கொழும்பு-கறுவாத்தோட்டத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து புறப்பட்ட வேளையில், தனக்கு பெருந்தொகை பணத்தை தரவேண்டிய ஒருவரை சந்திக்கச் செல்வதாக தினேஸ் ஷாப்டர், தமது மனைவிடம் கூறிச் சென்றுள்ளார். எனினும் நேரமாகியும் அவர் வராதப்படியால், அவரின் மனைவி, கணவரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் எனினும் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு அவர் அறிவித்த நிலையில், நிறைவேற்று அதிகாரி பொரளை மயானத்துக்கு அருகில் கையடக்க தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்துள்ளார். மயானத்திற்கு சென்று பார்த்தபோது, தினேஸ் ஷாப்டர், அவரது காரின் இருக்கையில் இருந்தபடியே நாடா ஒன்றினால் பிணைக்கப்பட்டு, கழுத்தில் வயர் ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிறைவேற்று அதிகாரி, உடனடியாகச் செயற்பட்டு, மயானத்தில் இருந்த ஒரு தொழிலாளியின் உதவியுடன் பிணைப்பில் இருந்து விடுவித்து,…

Read More

நவம்பரில் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கருவிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கியுள்ளன என தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். எச்.ஐ.வி சுய-பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் உள்ள தேசிய பாலியல் நோய் பிரிவுகளில் பெறமுடியும் என்றும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும் கிளினிக்குகளுக்கு செல்ல விரும்பாதவர்கள், know4sure.lk என்ற இணையதளத்தில் கிட் ஒன்றைப் பெற்று அதை தங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம்.

Read More

மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணியை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அனுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் நிரந்த விஸ்சுந்தர தெரிவித்தார். மஹவ சந்திக்கும், வவுனியாவிற்கும் இடையிலான வடக்கு ரயில் பாதையின் குறித்த பகுதி சுமார் நூறு வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படவில்லை. இதனால், ரயில்கள் அடிக்கடி தண்டவாளத்தை விட்டு தடம் புரள்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு சிறந்த ரயில் சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அநுராதபுர பிரதேச போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார். . மஹவ மற்றும் வவுனியாவிற்கு இடையிலான ரயில் பாதையை இரண்டு கட்டங்களாக புனரமைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இதன்படி, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலும், அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலும் இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளன. அனுராதபுரத்திலிருந்து…

Read More

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கடந்த வாரம் சீனாவுடன் அவர் பேச்சு நடத்தியிருந்தார். ஆகவே குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகளை கையாளமுடியும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும் ஜி20 கட்டமைப்பின் கீழ் நிவாரணம் வழங்குவதில், சீனாவின் வகிபாகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அசார் அலி, இன்று (சனிக்கிழமை) கராச்சியில் ஆரம்பமாகும் டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடையளிப்பதாக அறிவித்தார். தனது ஓய்வுக் குறித்து அவர் கூறுகையில், ‘100 டெஸ்டுகளில் விளையாட வேண்டும் என விருப்பப்பட்டேன். இந்தப் பருவத்தில் எல்லா டெஸ்டுகளிலும் விளையாடியிருந்தால் இந்த இலக்கை எட்டியிருப்பேன். இனி அது நடக்காது என்பதால் இளைஞர்களுக்கு வழி விட விரும்பினேன். இது என் சொந்த முடிவு. யாரும் என்னை வற்புறுத்தவில்லை’ என கூறினார். 2019ஆம் ஆண்டு சர்ஃபராஸ் அஹமது நீக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் தலைவராக 9 டெஸ்டுகளில் அசார் அலி பணியாற்றினார். இவரது தலைமையில் இலங்கை, பங்களாதேஷூற்கு எதிராக சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றது. எனினும் அச்சமயத்தில் அசார் அலி சரியாக விளையாடாத…

Read More

முல்லேரியா – அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தண்ணீர் காய்ச்சுவதற்காக ஹீட்டரை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் கூறுகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் மூத்த சகோதரியும் வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு வந்த பார்த்த போது, குழந்தை படுக்கையில் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையைக் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள மின்சாரம் அணைக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சாரம் மூலம் தண்ணீரை சூடாக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார். பகுதி இரண்டு வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும். பாடப் புத்தகங்களிலுள்ள விடயங்கள் அடங்கிய பகுதி 2 வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது. இதற்கமைய, பகுதி இரண்டு வினாப்பத்திரம் முற்பகல் 9.30 அளவில் வழங்கப்பட்டு, 10.45 அளவில் நிறைவுச் செய்யப்படும். அதில் 60 வினாக்கள் அடங்குகின்றன. பின்னர் 40 வினாக்கள் அடங்கிய பகுதி ஒன்று வினாப்பத்திரம், முற்பகல் 11.15க்கு வழங்கப்பட்டு மதியம் 12.15க்கு நிறைவு செய்யப்படும். இந்த முறை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும். பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர்கள், பாதுகாவலர்கள் செல்ல முடியாது. பரீட்சார்த்திகளை பாடசாலை ஆசிரியர்களே அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டில் இன்று (17) முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read More

ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பல்வேறு பிரிவுகளின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய இடத்தையும் காரையும் மோப்ப நாய்கள் மூலம் பரிசோதித்ததாகவும், அந்த இடத்தின் CCTV காட்சிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் மற்றும் தொலைபேசி தகவல் ஊடாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் படுகொலை தொடர்பான புலனாய்வு விசாரணைப் பிரிவினர், பொரளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More