Author: admin

FIFA 2022 உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய, இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. குறித்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. நெதர்லாந்து அணி 10, 45 மற்றும் 81ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், ஐக்கிய அமெரிக்காவினால் 76ஆவது நிமிடத்தில் மாத்திரமே கோல் ஒன்றைப் பெற முடிந்தது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக உழைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். கற்றறிந்த சமூகத்தினால் ஜனாதிபதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்றத்தை பலப்படுத்த அவர் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பலொன்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். களுத்துறை வடக்கு, பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி நிஷான் குமார வசிக்கும் பொந்துபிட்டிய, வெலிபன்ன குருந்த வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் இன்று (03) வீட்டுக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல், வீட்டில் இருந்த 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளை கும்பலின் போது பொலிஸ் பொறுப்பதிகாரி வீட்டில் இல்லை, வீட்டில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். சந்தேகநபர்கள் T56 துப்பாக்கியை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலுள்ள இரண்டு பொலிஸ் நிலையங்கள் தொடர்பான வழக்குப் பொருட்களாக இந்த தங்க ஆபரணங்கள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

முடி கொட்டுவதால் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட, டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய ஆதர் ரஷீத் என்ற இளைஞர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களுக்குள் தலையில் பக்டீரியாவால் ஏற்படும் செப்சிஸ் நோய் தாக்கியுள்ளது. ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து இவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மருத்துவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை தனது வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும். கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம் விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்னொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 01 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 08கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி கைப்பற்றப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 25000ரூபா எனவும் ஹெரோயின் பெறுமதி 400000ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

அரச வாகனங்களின் உரிமையை ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது, அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Read More

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முயற்சித்த சம்பவம் தோல்வியடைந்துள்ளது. தெமட்டகொட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தினார். இதேவேளை, உரிய தவணைகள் செலுத்தப்பட்ட நிலையிலும் நிதி நிறுவன அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More