Author: admin

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர்கள் அன்மையில் பொலிஸ் மா அதிபர் திரு. விக்கிரமரத்தினவைச் சந்தித்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் முஸ்லிம்கள் ஆடு மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது அமுலில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ் அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்குமாறு கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

Read More

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா். உயர்தர வகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில் வௌியிடப்படும் விடயங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஒழுங்குமுறையை மேற்கொள்ள எதிா்பாா்ப்பதாக அவர் கூறினார். இதேவேளை, இவ்வருட உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவா்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் இராஜாங்க சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளாா்.

Read More

உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது எனவும் எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய காலநிலை எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ, சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும், தீவிரத்திலிருந்து மேலும் தீவிரமாக மாறலாம். புவி வெப்பமடைதலின் அளவிற்கும், தொடர் மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வருடத்தின் ஜூன் மாத முதல் சில நாட்களிலேயே, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, இதுவரை பதிவான ERA5 தரவுப் பதிவுகளின்படி, கணிசமான அளவு வித்தியாசத்தில் அதிகமாக இருந்தது ஐரோப்பாவின் காப்பர்நிகஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. தரவுகளின்படி, தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை, ஜூன் 7-லிருந்து ஜூன் 11-க்கு இடைபட்ட காலத்தில் 1.5 செல்சியஸ் வரம்பின்…

Read More

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பும் வரை அவர் தற்காலிக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் இருந்து ஜனாதிபதி வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர். ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை பற்றி விவாதிக்க பல முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். கடன் மறுசீரமைப்பு பொறிமுறை தொடர்பாக பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதி ஜூன் 25 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.

Read More

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருடம் முதல் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சிக்கலான நிலைமைகள் நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலீட்டாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக உலக வர்த்தக மையத்தில் முதலீட்டாளர் வசதி மையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அது அனைத்து அரச நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். முதலீட்டாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், அது தொடர்பான நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பதற்கும் சந்தர்ப்பம்…

Read More

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன எச்சரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் கவலையாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது, ஆனால் மனித ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் இப்போது புதிய ஆராய்ச்சியின் மூலம் முன்னணியில் உள்ளது.” இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் முக்கிய ஆபத்து காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, என்று வைத்தியர் அனிது பத்திரன எடுத்துரைத்துள்ளார். நீங்கள் மோசமான தரமான காற்றை சுவாசிக்கும்போது, காற்று மாசுபடுத்திகள் உங்கள் நுரையீரல்கள் மற்றும் உங்கள் இதயம் வழியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆழமாக செல்ல முடியும். இது உங்கள் இதயம் மற்றும் சுற்றோட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்,” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரித்து…

Read More

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுனர்களுக்கான பயிற்சி காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்து, அவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்குவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சிகளை நிறைவு செய்த டிப்ளோமாதாரிகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் , மேல் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று இலங்கையில் 10 835 அரச பாடசாலைகளில் 2 இலட்சத்து 50 000 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். 41 இலட்சம் மாணவர்கள் அரச பாடசாலைகளிலும் , ஒரு இலட்சத்து 50 000 மாணவர்கள் தனியார் பாடசாலைகளிலும் கல்வி கற்கின்றனர். நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுனர்கள் டிப்ளோமாதாரிகளாக வெளியேறுகின்றனர். எனினும் இவர்கள் பயிற்சி…

Read More

இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பாகக் காணப்படும். • அனுராதபுரம் – பிரதானமாக சீரான…

Read More

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் அமைப்பு மூலம் கடவுச்சீட்டை பெறுவதற்கு நான்கு எளிய வழிமுறையினை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஹோமாகம பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் நேற்று (15) இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார். பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் பின்வரும் முறையில் ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறலாம்; www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினை பார்வையிடவும் உங்கள் கைத்தொலைப்பேசிக்கு கிடைக்கப்பெறும் கடவுக்குறியீட்டை உள்ளிடவும் தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களின் SCAN செய்யப்பட்ட நகல்களை உள்ளிடவும் அருகிலுள்ள நிலையத்திற்கு சென்று உங்கள் கைரகை அடையாளங்களை பதிவு செய்யவும். இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக 0112 101500 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Read More