Author: admin

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள என்ஜினியரிங் கோர்ப்பரேஷனின் பிரதான அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Read More

உரங்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை வருட இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கிணங்க, இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை விவசாயிகள் உரங்களை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க இந்த அறிவிப்பை விடுத்தார். இந்த உறுதிமொழியை மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு அரசு துணை சொலிசிட்டர் ஜெனரலை கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பின்னர் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Read More

தாய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைக்கு வழங்கிய உணவு தொண்டையில் சிக்கிக் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை – பிரிட்வெல்வத்த பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த அசம்பாவித சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு வயது குழந்தையே உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய தாய் உணவை தயாரித்து தனது கைக்குழந்தைக்கு கொடுக்கும் போதே வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், வீட்டினுள் பெண் விழுந்து கிடப்பதைக் அயலவர்கள் அவதானித்துள்ள நிலையில், குழந்தையும் தனது தாயைக் கட்டிப்பிடித்தவாறு இருந்துள்ளது. பின்னா் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. உணவு அருந்தி கொண்டிருந்த குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கியதால் இந்த பரிதாப மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் தாயான 26 வயதுடைய பெண் சில காலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை…

Read More

இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது. ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இந்த பேச்சுவாா்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சறுக்கிச் சென்று சொகுசுப் பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துடன், சொகுசு பஸ் முன்னோக்கிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 314.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.83 ரூபாவாகவும் காணப்படுகிறது. அதேசமயம், கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 240.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 226.09 ரூபாவாகவும் காணப்படுகிறது. இதேவேளை, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி 401.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Read More

ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது. இந்த இளைஞன் நேற்று (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு சவூதி அரே­பியா, இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­யொன்றை முன்­வைத்­துள்­ளது. இந்த விடயம் தொடர்­பி­லான கோரிக்­கைகள் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­ல­யத்தின் ஊடாக இலங்கை அர­சாங்­கத்­திடம் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இன்று வரை எந்­த­வொரு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­யி­னையும் முன்­னெ­டுக்­க­வில்லை. பய­னா­ளி­களின் பாவ­னைக்கு இந்த வீட்டுத் திட்டம் கைய­ளிக்­கப்­ப­டா­மை­யினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறி­யுள்­ளது. கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக சவூதி அரே­பி­யா­வினால் 500 வீடு­களைக் கொண்ட மன்னர் அப்­துல்லாஹ் மாதிரி நக­ர­மொன்று அம்­பாறை மாவட்­டத்தின் நுரைச்­சோலை கிரா­மத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. கிழக்கு ஆசி­யாவில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நிவா­ரண­த்திற்­கான சவூதி தேசிய பிரச்­சாரம் என்ற நிறு­வ­னத்­தி­னா­லேயே இந்த வீட்டுத் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. அக்­கா­லப்­ப­கு­தியில் சவூதி உள்­துறை அமைச்சின் கீழ் காணப்­பட்ட இந்த நிறு­வனம்- இன்று, நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை­க­ளுக்­கான…

Read More