பதவியேற்பு நிகழ்வையும் பகிஷ்கரித்தார்..! புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை பிரதமர் மகிந்த ராஜபக்ச புறக்கணித்து, அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவை தான் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இளையவர்களை அடிப்படையாக கொண்ட அமைச்சரவை குறித்து ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டு வந்த அதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடு கடும் நெருக்கடியில் உள்ளதால் முக்கிய அமைச்சரவை பதவிகளிற்கு அனுபவமுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். எனினும் பதவியேற்ற கையோடு புதிய அமைச்சர்கள் அனைவரும் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
Author: admin
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (18) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமானது ஓமந்தை, அரச வீட்டு திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்த போது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞன் ஒருவருடன் புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஓழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (17) காலை பேருவளையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பிற்பகல் வாத்துவ நகரில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை வாத்துவ நகரில் இருந்து மொரட்டுவை வரை பேரணியாக செல்ல உள்ளனர்.
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. என்ற போதும் வணிக நோக்கங்களுக்கான எரிவாயு கொள்கலன்கள் அதாவது 37.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன்கள் மாத்திரமே இன்று விநியோகிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் எரிவாயுடன் கூடிய கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையும். எனவே நாளை முதல் சந்தைக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர் நேற்று அதிகாலை வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர். இதற்கமைய இந்த குழுவினர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள். இலங்கைக்கு இந்த வருடத்திற்கு, 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று (18) காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டுள்ளது. பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுரங்கத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் புகையிரதம் தடம் புரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அப்போது புகையிரதத்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும், அவர்களை மீண்டும் பதுளை புகையிரதம் நிலையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
17பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. 1. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி. 2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் 3. கலாநிதி ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டத் தொழில்கள் 4. பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு & சுற்றுலா 5. திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் 6. கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் 7. விதுர விக்கிரமநாயக்க – தொழிலாளர் 8. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் 9. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி 10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் 11. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு 12. காஞ்சனா விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல் 13. தேனுக விதானகமகே -விளையாட்டு…
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நாளை (19) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாமா பன்னெஹேகா தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்துடன் இணைந்து கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.