திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் காற்றின் நிலை மாறும் எனவும் அது இலங்கையை கடக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தீவின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Author: admin
லங்கா சதொச நிறுவனம் ஏழு பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை இவ்வாறு ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் – ஒரு கிலோ 185.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது) பருப்பு – ஒரு கிலோ 374.00 ரூபாய் (11.00 ரூபாய் குறைக்கப்பட்டது) டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபாய் (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது) மிளகாய் – ஒரு கிலோ 1,780.00 ரூபாய் (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது) நெத்தலி – ஒரு கிலோ 1,100.00 ரூபாய் (50.00 ரூபாய் குறைக்கப்பட்டது) வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோ 218.00 ரூபாய் (6.00 ரூபாய் குறைக்கப்பட்டது) உருளைக்கிழங்கு – ஒரு கிலோ 285.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது)
தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டகால மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைர்ஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.29 கோடியைத் தாண்டியது. மேலும், கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 66.79 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் (07N – 15N, 80E – 85E) தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை,…
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சேம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹெரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து மேலும் 87 வீரர்களை மாத்திரம் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி (இந்திய ரூபா) சன்ரைசர்ஸ்…
(எஸ்.எம்.எம்.றம்சான்) கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் -4B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக இனங்காணும் ஆற்றலை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றும் குழுவினர்கள் ,பழைய மாணவர்கள் உட்பட பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது.
அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்டம், ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது. அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அதிக விலைக்கொடுத்து முட்டையை சில்லறை வர்த்தகர்களிடம் கொள்வனவு செய்ய வேண்டாம். 49 முதல் 50 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் முட்டையை விநியோகிக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.