அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாயாக பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்தார். எதிர்வரும் வருடத்தில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களங்களின் பிரதிநிதிகள் அண்மையில் (30) உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டுவதற்கு மேற்படி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கான காரணங்கள் என்ன? இதற்கான காரணங்களில் 2019 டிசம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…
Author: admin
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸில் கொட்டக்கலையில் ஆணொருவர் 65 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுதற்காக கொண்டுச் சென்றுள்ளார் இதன்போது குடாகம பகுதியில் வைத்து 3 பெண்கள் பஸ்ஸில் ஏறிய நிலையில், அப்பெண்களில் ஒருவர் குறித்த ஆணுக்கு அருகில் நின்றதாகவும் சில மணி நேரத்தின் பின்னர் குறித்த ஆணின் பணப்பை காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த ஆண். அருகில் இருந்த பெண் பணத்தை எடுத்ததாக கூறி அந்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணுடன் வந்த ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவருடன் மேலும் இரண்டு பெண்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட…
திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. தகுந்த சோளம் கிடைத்தமையினால் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தால் நாளாந்தம் 60,000 திரிபோஷா பக்கற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாய்மார்களுக்கான திரிபோஷா பொருட்கள் உற்பத்தி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021 உயர்தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (01) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 200 முதல் 300 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 150 முதல் 170 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு வெங்காயத்தின் மொத்த விலை நேற்றைய விலையை விட இன்று 340 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே இதனை வலியுறுத்தியதாக ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் புரிதலை மேம்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் எவ்வாறு சாத்தியமான முன்னோக்கி செல்லும் பாதையை ஆதரிக்க முடியும் என இதன்போது இருவரும் கலந்துரையாடினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்த சமந்தா பவர், இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்தல் உட்பட, இலங்கையின்…
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (02) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00 மணி வரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய மின் விநியோகக் குழாய் பதிக்கப்பட்டதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுளள்து.
இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் எனவும், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில்,இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும் என தான் நம்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 41 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று மத்திய கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நேற்று (01) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், இந்நாட்டிலுள்ள நாற்பத்து மூன்று இலட்சம் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு ஆங்கில மொழி,தகவல் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி அறிவியலை வழங்குவதற்கான துரித திட்டம் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். ,துரித வேலைத்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் புதிய…
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்திலிருந்து நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் நேற்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை யாழ் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.