கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடத்தல்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்து 800 அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டினார். 2021 ஆம் ஆண்டில் கடத்தல்களின் எண்ணிக்கை 835 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்களாக நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு வடிகால் அமைப்பு முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் பெய்த அடை மழை காரணமாக கண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கண்டி புகையிரத நிலையம், மத்திய மாகாண கல்வி திணைக்கள கட்டிடம் மற்றும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம் (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக 404 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார். அசூர் மற்றும் ஏரோப்ளோட் விமான நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன. ரெட் விங்ஸ் மூலம் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்யா – இலங்கை இடையில் 03 நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் 795 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே நீக்கியுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். தற்போது 670 தயாரிப்புகள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றில் சில பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு 55 ரூபாவை விட குறைவான விலையில் முட்டையை வழங்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வீசி வரும் கடுமையான பனிப்புயல் அங்குள்ள பல்வேறு மாகாணங்களை புரட்டி போட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த பயங்கர பனிப்புயல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவையும் பாதித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா, மெண்ட்ரீல் உள்ளிட்ட பல மாகாணங்கள் பனிப்புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலோவானா நகரில் இருந்து வான்கூவர் நகர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பனிப்புயலால் சாலை முழுவதும் பனிக்கட்டியாய் மாறியிருந்ததனால் அந்த சாலையில் சென்ற பஸ் பனியில் சறுக்கி கவிழ்ந்தது. இதில் பஸ் பல முறை உருண்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள்…