யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர். இந்த விஜயத்தின் போது, அவர்கள், கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கோட்டைக்கு பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை.
Author: admin
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) கூடுகின்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா போரை தொடங்கியது. 10 மாதங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. ரஷ்யாவின் இந்த கொடூர போர் உக்ரைனில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, இலட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்தது. அத்தோடு.உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- போர் தொடங்கிய பெப்ரவரி 24 ஆம் திகதியிலிருந்து கடந்த 26 ஆம் திகதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 6,884…
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நத்தார் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பலத்த மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 .இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்துக்கு 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ள நிலையில். மேலும் 12 பேர் கானாமல்போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
( எம். என்.எம்.அப்ராஸ்) ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில்,றிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எயிட் இன் ஒத்துழைப்புடன் “நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்”எனும் தலைப்பிலான அம்பாறை மாவட்டத்தில் இளைஞர்கள் பங்கு பற்றிய பயிற்சி பட்டறை காரைதீவு தனியார் மண்டபத்தில் ஐ.ஆர்.ஓ ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாக இயக்குனர் எ.றொஸான் முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று(28)இடம்பெற்றது. ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் பயிற்சி பட்டறையின் வளவாளராக முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஸ்தபா (மயோன் முஸ்தபா) அவர்கள் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார். இதன் போது முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஸ்தபா(மயோன் முஸ்தபா) உரையாற்றுகையில், இளைஞர்களுக்கு வழிகாட்டல் மிக அவசியானதாகும். இளைஞர்கள் சமூகத்திற்குள் நேர்மறையாக சிந்திப்பதால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கின்றன?நேர்மறையான சிந்தனைமிக்க இளைஞர்களின் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கை என்ன? மற்றும் உயர் கல்வியில் பல துறைகள் காணப்படுகின்றது இளைஞர்கள் தமக்கு விருப்பமான கல்வி துறையை தெரிவு செய்வதுடன்,தொழில் துறையில் முன்னேற வேண்டும் இதற்கான உரிய…
இவ்வருடத்தில், பல்வேறு காரணங்களால் வழமையான பணியிடங்களை விட்டு வேறு சில பாடசாலைகளில் டிசம்பர் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி நியமனத்தை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியாண்டு நிறைவடையும் வரையில், குறிப்பாக மார்ச் 24 ஆம் திகதி வரை குறித்த ஆசிரியர்களின் பணி நியமனம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இடமாற்ற சபைகள் மூலம் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் மீண்டும் கடிதம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதம் அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 58 புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி 50 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். கடந்த மாதம் தொடர்பான உள்நாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தரவுகளுக்கமைய இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 8 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவு அறிக்கைகளின்படி, நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய புகலிடத்திற்கான விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 1,643 ஆகும். இதில் மலேசியர்கள் சமர்ப்பித்த 333 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, இதுவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அதிக எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. இந்தப் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளது.
டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், குறித்த நபரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் ஓட்டோவும், இலங்கை போக்குவரத்து சபை பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி பலியாகியுள்ளார். கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். அச்சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டோவை அச்சிறுமியின் தாயாரே செலுத்திச் சென்றுள்ளார். கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸூம், அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஓட்டோவுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மரணித்த சிறுமி, முத்துமாலை கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு பஸ்ஸின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.