Author: admin

நாட்டில் இன்று (31) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவரிடமிருந்து 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

அமெரிக்காவினால் இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தினை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால், நாட்டில் மருந்து பொருட்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இந்த நன்கொடை அந்த நெருக்கடியை சற்று நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது.

Read More

11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், விஹாரையின் கடமையாற்றும் பிக்குவும் அந்த பிக்குவின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ மொனராகலை, தொம்பஹாவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு உடந்தையாக இருந்த சிறுமி​யின் பாட்டி மற்றும் அத்தை ஆகிய இருவரும் புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சிறுமி, கந்தானை பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்கின்றது. பாடசாலை விடுமுறைக்கு லியன்கொல்ல பிரதேசத்திலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு நவம்பர் மாதம் வந்துள்ளது. அச்சிறுமியை பாட்டி விஹாரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த விஹாரையில் வைத்து பிக்குவும், சிறுமியின் அத்தையின் வீட்டில் வைத்து பிக்குவின் சகோதரனும் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. கந்தானைக்கு சிறுமி திரும்பியதன் பின்னர், தனக்கு நேர்ந்ததை உறவினர்களிடம் தெரிவிக்க, இதுதொடர்பில் கந்தானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டு அமைய, கந்தானை பொலிஸாரின்…

Read More

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன. குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள், ஆறுகள் உறைந்துள்ளன. அமெரிக்கா – கனடாவின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் பனிப் பாறையாக உறைந்துள்ளது. சில இடங்களில் மட்டும் பனிப்பாறைக்கு கீழ்ப்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.

Read More

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் திடீர் சுகவீனமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடம்பினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர். நண்பர்கள் மூவரும், போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் எஞ்சிய போதைப்பொருள் முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார். அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் , மயக்கமுற்று விழுந்த இளைஞனை , போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து, போதை தெளியும்…

Read More

ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் மத்தள விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில்,படுகாயமடைந்த நிலையில்,வீதியால் சென்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் 9 மில்லிமீற்றர் ரக 10 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஒன்றுடன் நேற்று (28) இரவு விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான அமெரிக்க பிரைஜை, பெண்ணொருவருடன் நேற்றிரவு 8.25 மணிக்கு சென்னை செல்ல விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள ஸ்கிரீனிங் இயந்திரம் வழியாகச் சென்றபோது, ​​குறித்த நபரிடம் மேற்படி வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்குரிய பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைதுசெய்யப்படும் நிலையில், எதிர்காலத்தில், போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை கைது செய்ய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Read More