இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வகை சிகரெட்டின் சமீபத்திய விலைகளை அறிவிக்கிறது. இதன்படி, ஒவ்வொரு வர்த்தக நாமத்திலிருந்தும் சந்தையில் வெளியாகும் சிகரட்டுகளின் சில்லறை விலைகள் இன்று முதல் பின்வருமாறு திருத்தப்படவுள்ளன.
Author: admin
முட்டை இறக்குமதி செய்வதே நாட்டில் தற்போது நிலவும் முட்டை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி என அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கமைய முட்டை விற்பனையாளர்கள் சங்கம் நேற்று முதல் முட்டையொன்றை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 18ஆம் திகதி வரை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனராத்ன மற்றும் அவரது மகனை தாக்கி, அவர்களது வீட்டை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த 13 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளை(வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா புதிய ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 9-ஆம் திகதி செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக சசிகலா 9-ஆம் திகதி மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கம் செல்கிறார். அங்கிருந்து மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும் பொது மக்களையும் சந்திக்கிறார். சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் முக்கிய இடங்களில் வரவேற்பு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நாளை(வியாழக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு குறித்து, எதிர்வரும், 10ஆம், 11ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், ஜனாதிபதிக்கும், தமிழத் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னாயத்தமாக, நாளைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 19 வயதான யுவதியொருவரை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, வீடியோ படம் எடுத்து மிரட்டியதாகவும், அதனை பிரதேச இளைஞர்களிடம் பகிர்ந்ததாகவும், பிரதேச இளைஞர்களும் தன்னை வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்றதாகவும் யுவதியொருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நகரை அண்மித்த பகுதியொன்றை சேர்ந்த யுவதி ஒருவரே 2 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். அதனை காணொளியாக பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, கடந்த 2 வருடங்களாக தொடர் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளனர். தற்போது…
ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரங்களுக்கும் விரைவாக ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக 3,000 கனிஷ்ட ஊழியர்களும் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.