Author: admin

இலங்கையில் இருந்து சீனாவிற்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனாவின் சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். இவற்றில் 29 தயாரிப்புகள் கடல் மீன்பிடி நீர்வாழ் பொருட்கள் என்றும், அங்கு பதிவுசெய்யப்பட்ட 38 இலங்கை நிறுவனங்கள் ஏற்றுமதியாளர்களாகச் செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 20 வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், சிகரட் மீதான 20 வீத வரி ஜனவர் 1 முதல் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் சிசுவின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக கிடந்து மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸாருக்கு திங்கட்கிழமை(02) மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அத்துடன், 34 வயதான பெண்ணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட மருதங்கேணிபொலிஸார் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பிறக்கவிருக்கும் தனது பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய கர்ப்பிணியான அந்தத் தாய் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருணம் வைபவமொன்றுக்கு அணிந்து சென்று மீண்டும் கொண்டுவந்து தருகின்றேன் என அந்த கர்ப்பிணி தாய், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் சுமார் ஒன்றரை இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியை இரவல் வாங்கியுள்ளார். அந்த தங்க சங்கிலியை அடகுவைத்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான ​பொருட்களை அந்தப் பெண் கொள்வனவு செய்துள்ளார். கொழும்பு கரையோர பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரவல் வாங்கிய பெண்ணை, கொழும்பு பதில் நீதவான், இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். “பிறக்கவிருக்கும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருமாறு வைத்தியசாலையில் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. ஆகையால், இரவல் வாங்கிய தங்க மாலை அடகுவைத்து, பொருட்களை கொள்வனவு செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என கரையோர…

Read More

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவுசெலவு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். வரவுசெலவு திட்ட கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 19 ஆயிரத்து 963 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 17 ஆயிரத்து 350 பேரும், இங்கிலாந்திலிருந்து 7 ஆயிரத்து 879 பேரும், அவுஸ்ரேலியாவிலிருந்து 5 ஆயிரத்து 158 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 ஆயிரத்து 984 நபர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து நான்கு பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Read More

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கிடைகாதமை காரணமாக அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க அரசாங்கம் இன்னும் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீர் விரயமாகும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து நீர் விரயம் ஏற்படும் இடங்களாக அரச அலுவலகங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுவதனால் நீர் விரயம் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பல இடங்களில் நீர் விரயமாகுவதனால் ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். எது எவ்வாறாயினும் கூறியதை போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார். இதேவேளை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சி காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள மக்கள் விரும்பும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உள்ளுராட்சித் தேர்தல் மாத்திரமின்றி, அரசாங்கம் முயற்சித்தால் மாகாணசபைத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும் என்றும்…

Read More

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

Read More