Author: admin

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ​ அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ​ நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ​ காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ​ மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ​ கடல் நிலை: மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக்…

Read More

சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்கின்றமை குறித்து தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய, மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சூழ்நிலைகளை ஆராய்ந்து விசேட நிபுணர்கள் பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மக்கள் தமது வழமையான சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். விமான நிலையங்களில் தற்போது எந்தவொரு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவதானமாக செயற்படுவது போதுமானது என்றார். விசேடமாக பண்டிகைக் காலத்தில் கொண்டாட்டங்களில் கலந்துகொள்தல், களியாட்டங்களில் ஈடுபடுதல், ஒன்று கூடுதல், சுற்றுலா செல்தல் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பயணங்களில் ஈடுபடல் உள்ளிட்ட செயற்பாடுகளின் போது மக்கள்…

Read More

ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்டுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கூடுதல் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதற்கட்டமாக ஆறு ஆளுநர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய ,மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்களை பெயரிட ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர் நியமிக்கும் பொறுப்பு பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவும் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு…

Read More

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பின்னர் ஜனவரி 21 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

இன்றும் (31) நாளையம் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது நிலவும் தேங்காய் விலை மற்றும் தங்கள் தயாரிப்புகளை மேற்கொள்வதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் செலவை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் ஆராய விரும்புகிறது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனைகளை விதித்துள்ளன, ஏனெனில் அவர்கள் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும், சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் சோதனையை வழங்க வேண்டும்.

Read More

2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார். இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய்தவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து பிரஜைகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

தலைமுறையின் சிறந்த கால்பந்து நட்சத்திரமாக அறியப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய ஊதியமாக வருடத்திற்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பெறுவார் என கூறப்படுகிறது. முன்னதாக மன்செஸ்டர் யுனைடெட் கழக அணிக்கு விளையாடிவந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து பரபரஸ்பர ஒப்பந்த்த்திற்கு பிறகு அணியிலிருந்து வெளியேறினார். அந்த காலகட்டத்தில், மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால் அணியில் சேர 305 மில்லியன் பவுண்டுகள் அவருக்கு வழங்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதனை அவர் அப்போது நிராகரித்திருந்தார். 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் கழக அணிக்கு விளையாடுவது குறித்து கூறுகையில், ‘வேறு நாட்டில் ஒரு புதிய கால்பந்து லீக்கை அனுபவிக்க ஆர்வமாக உள்ளேன். ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த…

Read More

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்குமானால் அதனை தடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் விரைவில் புதிய ஆட்சி உருவாக தேர்தல் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு தீர்மானித்தன் பின்னர், நீதிமன்றம் அதற்கு முரணான தீர்ப்பை வழங்கினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார். புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய நாடாளுமன்றமும் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கையில்லாத இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Read More