சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சீனி கையிருப்பின் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபாய் எனவும், குறித்த சீனி கையிருப்பு பறிமுதல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Author: admin
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2032 ரூபாய் எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும் விலைகளை அறிய வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ அழைக்குமாறு அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
60000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்காக இந்த நிலக்கரி அனுப்பப்பட்டுள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உரிய அளவு நிலக்கரி இல்லாமை காரணமாக இந்த ஆண்டு 10 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டி ஏற்படலாம் என்று இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையிலேயே தற்போது இந்த நிலக்கரி தொகை இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் 550 வேலை வாய்ப்புகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட வேலை ஆணையைப் பெற்றுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, 250 பதிவு செய்யப்பட்ட தாதியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 200 தாதி உதவியாளர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதான கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில், கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்ரேலியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளார்.
வவுனியா காயங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற வயல்விழாவில் சோள செய்கையினால் கிடைக்க கூடிய பயன்கள், குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டும் வழிமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது சோள செய்கையில் ஈடுபட்ட விவசாயினால் சிறிய இயந்திரங்கள் ஊடாக மண்ணை பண்படுத்தும் முறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அப்பகுதி மக்களிக்கும் அதன் நன்மைகள் தொடர்பிலும் நோய் தாக்கங்கள் தொடர்பாகவம் விவிளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் பி. அற்புதசந்திரன், பாடவிதான உத்தியோகத்தர் அ. சுயேந்திரா, விவசாய போதனாசிரியர் அபிரான் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள், போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும். ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் பற்றிய சூழமைவில் கடல் வழியாக ஆட்கடத்தல், மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை அமைப்பின் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) இடம்பெற்றது. நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு எதிரான அமைப்பு, சமூக மேம்பாட்டு சேவைகள் அமைப்பு, மற்றும் கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை அமைப்பு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இதன்போது கடல்வழியாக ஆட்கடத்தல், புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், சட்டரீதியற்ற கடல் பயணங்கள், தொடர்பிலும், இவை தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பிலும், ஊடகவியலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன், மற்றும் சிரேஸ்ட்ட வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஜெயசாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும். விளக்கங்களையும் வழங்கினர்.