முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Author: admin
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வீதியோரமாக சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபர், பாதுகாப்பற்ற தண்ணீரில் சோளத்தை ஊறவிட்டு விற்றமை, பாதுகாப்பு அங்கிகள் அணியாதமை, மருத்துவ சான்றிதழ் பெறாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து சுகாதார விதிமுறைகளை மீறி சோளம் விற்பனையில் ஈடுபட்டார் என மந்துவில் பொது சுகாதார பரிசோதகரால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சோளம் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , சோளம் விற்பனையில் ஈடுபட்டவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையால், அவருக்கு எதிராக மன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. இதற்கமைய மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள். குறித்த அஞ்சலி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கான நாளாந்த தேவை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும் QR குறியீட்டு முறை மற்றும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி என்பன தேவை குறைவதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலா் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்கு பெயா் பெற்ற மாலைதீவு ஜனாதிபதியாக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவரான அப்துல்லா யாமீன், அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு அளிக்க இலஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த குற்றவியல் நீதிமன்றம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றத்துக்கு 7 ஆண்டுகள், இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2019ஆம் ஆண்டு அரசுப் பணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள்…
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிய பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு நிலைமை மேலும் மோசமடையும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது சுமார் 25 மில்லியன் பேர் மனிதநேய உதவிகளைச் சார்ந்து இருக்கின்றனர். தலிபான்களின் தடை பல்வேறு திட்டங்களைப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் அது குறிப்பிட்டது. அரச சார்பற்ற அமைப்புகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என்று புகார் செய்யப்பட்டதால் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறினர். விதிகளை மீறும் அமைப்புகளின் செயல்பாட்டு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தலிபான்கள் கூறினர். ஆப்கானிஸ்தானில் உள்ள 180க்கும் மேற்பட்ட…
நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன் நாட்டை ஊடறுத்து 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை அவதானித்ததையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர், பயன்படுத்தப்படாத அந்த தோட்டாவை, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.