இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது. ஆப்பிள் ஐபோன் 5, ஆப்பிள் ஐபோன் 5சி, ஆர்காஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE, கிராண்ட் எக்ஸ் குவாட், ஹெச்டிசி டிசையர், Huawei அசெண்ட் டி, அசெண்ட் டி1, அசெண்ட் டி2, அசெண்ட் ஜி740, அசெண்ட் மேட், அசெண்ட் பி1, குவாட் எக்ஸ்எல், லெனோவா ஏ820, எல்ஜி எனாக்ட், எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள், மெமொ ZTE, சாம்சங் கேலக்சி ஏஸ்2, கேலக்சி கோர், கேலக்சி எஸ்2, கேலக்சி எஸ்3 மினி, கேலக்சி டிரெண்ட் 2, கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி எக்ஸ்கவர் 2,…
Author: admin
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டது.
ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தக தொழிலதிபர் பவெல் என்டோவ், இந்தியாவுக்கான விஜயத்தின் போது உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவில் “சொசேஜஸ்” தொழிலில் தலைவரான என்டோவ், ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்திய சுற்றுப்பயணத்தில் அவருடன் சென்ற அவரது நண்பரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். பவெல் என்டோவ் கிழக்கு மாஸ்கோ பகுதியில் உள்ள விளாடிமிர் நகரைச் சேர்ந்த பிரபலமானவர். ரஷ்ய-உக்ரைன் போரை விமர்சித்ததன் காரணமாக அவரைப் பற்றிய ஊடக அறிக்கைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதனால் அவர் ரஷ்ய அதிகாரிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் உஸ்வெவ தொழிற்சாலைகளில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 39,200 ஓடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட ஓடுகளை எடுத்துச் செல்ல, சபைக்கு இருபத்தி ஒரு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான ஒன்பது தொழிற்சாலைகளில் ஏழு தொழிற்சாலைகளில் நிலம் மற்றும் கட்டிடங்களின் உரிமையை உறுதி செய்வதற்கான உரிமை பத்திரங்களோ, சட்டப்பூர்வ ஆவணங்களோ இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் நிலம் மற்றும் கிட்டத்தட்ட நான்கு கோடி மதிப்புள்ள கட்டிடங்களுக்கு நிலையான சொத்து பதிவேடு பராமரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நிலையான சொத்துக்கள் கணக்கெடுக்கப்படவில்லை மற்றும் கணக்கெடுப்பு அறிக்கைகள் கணக்காய்வு அலுவலகதிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்கு என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜனவரியில் நாடு முழுவதும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்வதாக அமைச்சு கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட ட்விட்டர் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹேக்கர் ஒருவர் 40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் தகவல்களை திருடி, டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் விபரங்கள், பயனர் பெயர், பின்தொடர்பவர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவையும் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த மோசடி தொடர்பாக நிறுவன மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிற நிலையில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ.ஜனக இதனைத் தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்திருந்தார். இது தொடர்பான அறிக்கையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வழங்கியதையடுத்து, அவரின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் தனியார் நிறுவனமொன்றில் பங்குகளில் 64 இலட்சம் ரூபாவை முதலீடு செய்திருந்த போதிலும், கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் சிறு இலாபங்கள் கிடைத்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் முதலீட்டு மதிப்பு கணக்கிடப்பட்ட விதம் மற்றும் முதலீடு தொடர்பான பங்குகள் குறித்த போதுமான தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை என்று கணக்காய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் 2019 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகளை குறிக்கிறது.
இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது, நாட்டில் உள்ள போக்கு மற்றும் இத்தகைய நடைமுறைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களின் அவசியத்தை அதிகாரசபை எடுத்துரைத்துள்ளதாகவும் வரிகளை திருத்தவும், புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றவும் தாம் முன்மொழிவதாகவும் குறிப்பிட்டார். புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இறப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் இதுபோன்ற மரணங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் சுட்டிக்காட்டினார். புகையிலை மீதான முன்மொழியப்பட்ட வரிச் சூத்திரம் புகைபிடிப்பதில் இருந்து மக்களைத் தடுக்கும் என்பதுடன் மரணங்களைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் வரி திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தால் 11…