2022 க.பொ.த உயர்தர பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது மேலதிக வகுப்புகளை நடத்துவது ஜனவரி 17ஆம் திகதிக்குப் பின்னர் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடம் சார்ந்த விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பரீட்சை சார்ந்த வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகம் செய்தல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல், பரீட்சைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற கேள்விகளை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை வழங்குதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். “ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ விதிமுறைகளை மீறினால், அருகிலுள்ள காவல் நிலையம், தேர்வுகள் திணைக்களம் அல்லது பின்வரும் எண்களில் புகார் செய்யலாம்,” என்று அவர் கூறினார். பொலிஸ் தலைமையகம்: 0112421111 காவல்துறை அவசரநிலை: 119 ஹாட்லைன் (தேர்வுகள் துறை): 1911 பாடசாலை தேர்வுகள் ஏற்பாடு கிளை: 0112784208 / 0112784537
Author: admin
இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் பிரிவொன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். இதேவேளை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை) இரவு 7மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் சானக்கவும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் தலைமை தாங்கவுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளன.
நாட்டில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தெரணியகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2,500 பில்லியன் ரூபா நாணயம் அச்சிடப்பட்டபோதிலும், அன்றாட செலவுகளுக்காக அது பயன்படுத்தப்படவில்லை என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக…
தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த திகதியில் அந்த சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாததையடுத்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தனது தோழியுடன் பாடசாலைக்கு செல்வதாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலாக கண்டியில் இருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் பயணித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிடைக்காததால், அவளை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்தெனிய பொலிஸாரை 081- 2374073 அல்லது 071- 8591066 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பிலாள அறிவித்தல் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கிடையிலான காலப்பகுதி தேர்தலுக்கான காலம் என அடையாளப்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதிக்குள் அரசியல் கட்சிகள், குழுக்கள் என்பன வேட்பாளர்கள் தொடர்பில் பிரசாரங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு அரச சொத்துக்களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரச சொத்துக்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் 104 (ஆ) (4) (அ)…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் இன்று(06) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரும், கிழக்கு பிராந்திய அமைப்பாளருமான தோழர் ஸ்ராலினின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையிலான வேலைத் திட்டத்துடன் செயற்பட முன்வருகின்ற பல்வேறு தரப்புக்களையும் இணைத்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சித் தேர்தலில் சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும், இது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.