பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு பாடசாலையின் கல்வியாண்டின் முதல் தவணை ஆரம்பமாகும் போது, ஆசிரிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பரிந்துரையின் பேரில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், மாகாண மட்டத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னரே நியமனங்கள் வழங்கப்படும். வயது வரம்பு குறித்த முடிவு பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆசிரியர் சேவைக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான குறிப்பிட்ட வயது வரம்பு ஆசிரியர் சேவை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு ஏற்ற பயிற்சி பெற்ற ஆசிரியரை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும். எனவே, ஆசிரியர் சேவை அரசியலமைப்பு மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மாகாண மட்டத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக…
Author: admin
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும், மூளை செயலிழந்தும் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் ஆவர். இதனால் கடும் குளிர்காலங்களில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத் துள்ள நிலையில், நாளை வரையில் இந்த 7 மாநிலங்களிலும் அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும், அதன் பிறகு குளிர் அலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே.ஜெனமணி தகவல் தெரிவித்துள்ளார்.
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த சம்பவத்தில் அண்ணன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய தருமராசா தவசீலன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தருமபுரம் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக, கடவுச்சீட்டையும் பணத்தையும் ஏஜென்சிக்கு வழங்குவதற்கு முன் அதனை சார்பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஏஜென்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 1989 அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இவ்வாறு சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டபூர்வமானது என்பதை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வயது பாலகன் ஒருவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். நேற்று (8) காலை புட்டிப் பால் அருந்திக் கொண்டிருந்த இரண்டு வயதான குறித்த பாலகன், மூச்சு திணறல் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளான். பாலகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பாலகனின் தொண்டையில் பால் அடைத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இதன்போது தெரிவித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலையே காணப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கக்கடவுள்ளன. அதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். பதிவு செய்யப்பட்டதற்கு இணங்க வாகனங்கள் அரச நிறுவனங்களின் வசமுள்ளனவா? அல்லது குறித்த வாகனங்கள் உரிய வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மட்டத்தில் தனித்தனியாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது மகளின் திருமண நாளன்று, தந்தையின் இதயம் துடிக்காமல் நின்றுபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சோகமான சம்பவம் கம்பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. திருமண நாளன்று, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீர் மாரடைப்பால் நடுவீதியிலேயே மரணித்துள்ளார். சம்பவத்தில், நாவலப்பிட்டியைச் சேர்ந்த மீரா சையிப் மொஹமட் சாலி (வயது 62) என்பவரே மரணித்துள்ளார். அந்த திருமண வைபவம் உடுநுவர பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர், தன்னுடைய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டியவில் இருந்து வெலம்பட எனும் இடம்வரைக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தனது கணவன் செலுத்திச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில், எதிர்திசையில் பயணிக்கும் ஒழுங்கையில் பயணித்துக்கொண்டிருந்தது. இதுதொடர்பில் மனைவி, அறிவுறுத்தியும் அது அவரது காதுகளில் விழவில்லை. எனினும், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவர், அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், தனக்கு நெஞ்சு வலிக்கிறது. மூச்செடுக்க முடியவில்லை…
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகள் இரண்டுமே சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் டத்தொடரின் முதல் போட்டி இன்று கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை நகரிலுள்ள கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 12 நாட்களே ஆன குறித்த சிசுவை தலவாக்கலை பொலிஸார் மீட்டு, இன்று (9) காலை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இன்று அதிகாலை 5.45 மணியளவில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவில் சிசுவின் அழுகுரல் கேட்பதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரால் குறித்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த சிசுவுக்கு தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலுள்ள பெண் கான்ஸ்டபிள் ஒருவரால் தாய்ப்பால் ஊட்டப்பட்டு, லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 12 நாட்களே ஆகியிருப்பதாக தெரிவித்துள்ள லிந்துலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர், சிசு தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நகரிலுள்ள CCTV கமெராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து, குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.