(எம்.என்.எம்.அப்ராஸ்) மூன்று தசாப்த காலமாக ஆசிரியராக கடமையற்றி ஒய்வு பெற்று செல்லும் ஏ.டபிள்யூ.எம்.சுபைரின் சேவை நலன் பாராட்டு விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின்(தேசிய பாடசாலை) சேர் றசீக் பரீட் கேட்போர் ௯டத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் அண்மையில்(21)இடம்பெற்றது. ஆசிரியர் ஏ.டபிள்யூ.எம்.சுபைர் இலங்கை ஆசிரியர் சேவையில் 1992ம் ஆண்டு இனைந்ததிலிருந்து சாய்ந்தமருது கமு/கமு/அல் – கமரூன் வித்தியாலயம், கமு/கமு மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை),கல்முனை கமு/கமு அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம்( தேசிய பாடசாலை)ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியதுடன் 2014ம் ஆண்டு தொடக்கம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியராக தன்னை இனைத்து கொண்ட இவர் சுமார் 08 ஆண்டுகள் இக் கல்லூரிக்கு சேவையாற்றியதுடன் எதிர்வரும் (2022.12.31)அன்று தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவினை சங்க தலைவா் அலியாா் றிபான், நிருவாக…
Author: admin
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த நிலையில், சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி ஊடகப் பணிப்பாளர் ஜானக ஹந்துன்பதிராஜா இதை தெரிவித்தார். சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நாடளாவிய ரீதியிலும், மாவட்ட மட்டத்திலும் இடம்பெறுவதாக ஜானக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார். இதன் பிரதான நிகழ்வு காலி சுனாமி நினைவுத்தூபியில் நாளை (26) காலை நடைபெறவுள்ளது.
நாட்டில் நாளை 309 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அந்த வகையில், 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன. ஆன்லைன் மனுக்களை ஒருங்கிணைக்கும் மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆன்லைன் மனுவில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார்கள். அர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன? அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை மீண்டும்…
பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை வளர்ப்பு நாய்க் குட்டியுடன், பாலியல் சேஷ்டைகளை செய்தாரென்று, பேராசிரியர் ஆஷூ மாரசிங்கவுடன், லிவிங் டுகெதரில் வாழ்ந்த, மனைவி செய்த முறைப்பாடு செய்துள்ளார் இதுதொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை, 23 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஊடகவியலாளர் மாநாட்டிலும் பகிரங்கப்படுத்தியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால், அரபு நாடுகளின் பங்களிப்புடன் உருவான பல்கலைக்கழகத்தை முடக்குவதிலும், முஸ்லிம் பெண்கள் தலையை முகத்தை மூடக்கூடாதெனவும், அது குற்றமெனவும் கூறி அவற்றை தடை செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்றை கொண்டு வந்தவரே இந்த பேராசிரியர் ஆச மாரசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், சிற்சில காரணங்களினால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்புமனு கோரல் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார். இதனிடையே எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னதாக தேர்தல் குறித்து அறிவிக்கப்படாத விடத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தலபத்பிட்டிய பிரதேசத்தில் இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி குறித்த யுவதியை கடத்த முயன்றுள்ளனர். பின்னர், அப்பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டை அண்மித்துள்ளது. இதன் காரணமாக இன்று(24) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது. நாளை(25) நாட்டின் அநேகமாக பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது. தாழமுக்கமானது நாளை(25) நாட்டினூடாக நகர்வதால் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் வடக்கு,…
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனைச் சபை தெரிவித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட ஒரு கிலோ கிராம் ஏலக்காய்க்கு சுமார் ஆறு கிலோ கிராம் பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7,000 – 8,000 ரூபாய் வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 79 டொலர்களாக பதிவாகியுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.