வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Author: admin
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு அனைத்து வழக்கிலும் பிணை வழங்கப்பட்டமை காரணமாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டநேர முடிவில் டொம் லதம் 78 ஓட்டங்களுடனும் டேவோன் கோன்வே 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி, 273 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 161 ஓட்டங்களையும் ஆகா சல்மான் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சவுத்தீ 3 விக்கெட்டுகளையும்…
மின்சாரக் கட்டணத்தை 60 – 65 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் றொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். மின்சாரக் கட்டண உயர்வுக்கு பயன்படுத்தப்பட்ட 20 அனுமானங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த கருதுகோளின் பிரகாரமே இந்த கட்டண அதிகரிப்பு சதவீதம் கண்றியப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டார். இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் கட்டண அதிகரிப்பில் கோரப்பட்ட தொகை கிடைக்காமையால் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு கட்டணத்தை அதிகரிக்கும் போது திறைசேரியின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்றார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே. மாயாதுன்னவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்னர் வகித்த பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B. ஹபுஹின்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
( எம்.என்.எம்.அப்ராஸ்) அம்பாரை மாவட்டம்,பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமுகமாக மாபெரும் இரத்ததான முகாம் சபையின் தலைவர் ஏ.எல்.சீத் தலைமையில் பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக்கல்லூரியில் ஏற்பாடாகியதுடன் இளைஞர்கள் யுவதிகள் என சுமார் 130 பேர் இரத்ததானம் வழங்கினர். இரத்ததான நிகழ்வானது மேமன் எயிட் Memon Aid அமைப்பின் பிரதான அனுசரனையில் வை.எம்.எம்.ஏ (YMMA )பாலமுனை கிளை மற்றும் செடோ அமைப்பின் ஒத்துழைப்பில் நடைபெற்றது. இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா,முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில்,ரம்யா லங்கா பாலமுனை செயற்பாட்டாளரும் உளவள ஆலோசக உத்தியோகத்தர் எஸ்.ஆப்டீன்,அம்பாரை மாவட்ட (YMMA)வை.எம்.எம்.ஏ.தலைவர் அதிபர் எம்.எல்.எம்.றியாஸ்,செடோ தலைவர் ஏ.எல்.றிஸ்மி,அக்/மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுல்லா,அல்ஹிதாயா மகளிர் கல்லூரியின் அதிபர் பீ.முஹாஜிரின், வை.எம்.எம்.ஏ. பாலமுனை கிளைத் தலைவர் எல்.சிறாஜ், ஆலோசகரும் விரிவுரையாளருமான எ.எச்.றிபாஸ், மரண உபகார நிதியப் பணிப்பாளர் ஐ.பி.எம்.ஜிப்ரி,றம்யா லங்கா அமைப்பின்…
வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை வழங்குதல் மற்றும் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினந்தோறும் இரண்டு கோப்பை கோப்பி அருந்துவது, இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கடுமையான உயர் இரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பை கோப்பி அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு கோப்பியின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்று தெளிவுப்படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் பணிப்பாளர் ஹிரோயாசு ஐசோ தனது ஆய்வில் விளக்கினார்.
சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஜனவரி 8ஆம் திகதி முதல் இந்த பணிகள் நிறைவடையும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ச் 2020 முதல், சீனாவுக்கு வரும் அனைத்து மக்களையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சீனா தனது கொரோனா கொள்கைகளை கைவிட்ட பிறகு கட்டுபாடுகள் நீக்கப்படும் அண்மையகால நடவடிக்கை இது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், சீனாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா புள்ளிவிவரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய கண்டத்திலுள்ள மோல்டா நாட்டிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் முதற்தடவையாக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்து குறித்த சுற்றுலாப், பயணிகள் இலங்கையில் 12 நாள்கள் தமது சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். 50 பேரைக் கொண்ட குறித்த சுற்றுலாக் குழுவினர் இலங்கையின் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் செல்ல எதிர்பார்த்துள்ளனர். இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், விமானசேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் பீ.ஏ.சந்ரசிறி உள்ளிட்டவர்கள் விமானநிலையத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.