Author: admin

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யானை தாக்கிய நிலையில்,குறித்த கடற்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளனமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. குறித்த சந்தேகநபரை இன்று புதன்கிழமை(04) நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இன்று(04) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது குறைக்கப்பட வேண்டிய பஸ் கட்டணங்களின் சதவீதங்கள் தொடர்பான அறிக்கையொன்று அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Read More

‘சீதாவக்க ஒடிஸி’ எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 வாரங்களுக்குள் இந்தப் புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் டவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களில் மாத்திரம் பல கோடி பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங், ஷங்காய் போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உச்சம் தொட்டுள்ள நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மற்ற நகரங்களிலும் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. சீன தடுப்பூசிகளால் தீவிர பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் வைரஸ் பரவல் இந்தளவுக்கு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதற்கிடையே கொரோனா பரவலைக் கண்காணிக்கக் கழிவு நீர் அமைப்புகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் சில நாடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் மற்றும்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிவித்தலில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், பிணைத்தொகை விபரம், வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன. நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்காக வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று (04) வெளியிடப்படவுள்ளது.

Read More

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர்…

Read More

சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சியைக் கண்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆரம்ப புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எவ்வாறாயினும், ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் முக்கிய உற்பத்தித் துறையில் வளர்ச்சி 3.0 சதவீதம் சுருங்கியது. நான்காவது காலாண்டில் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருந்தது, இது ஜூலை-செப்டம்பரில் 4.2 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வட்டி வீதங்களில் கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் மென்மையான உலகளாவிய தேவையால் கணினி சிப்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான ஆண்டாக இருக்கும் எனவும் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரங்கள் மந்தநிலையில் இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது புத்தாண்டு செய்தியில்…

Read More

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ. ஏக்கநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

காஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் (சமையல் எரிவாயு) எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காரக்மாவட்டத்தில் கடந்த 2007 முதல்மக்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வில்லை. ஹங்கு நகரில் 2 ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சமையல் எரிவாயுவை மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மானிய விலையில் ரேஷனில் வழங்கப் படும் கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றின் விலையை பாகிஸ்தான் அரசு 25 முதல் 62 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஏழைகளுக்கு இந்த விலை உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும்…

Read More