முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் வாகனம் நிக்காமல் சென்றுள்ளது. இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த மாணவனும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார். வாகனத்தில் இருந்து குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது சடலம்…
Author: admin
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று மாவட்டங்களில் 1500இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,511பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு – கொக்களாய், முகத்துவாரம் பகுதியில் இன்று காலை கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக படகு ஒன்றினை செலுத்தும் போது படகு விபத்திற்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது காயமடைந்த மற்றைய மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கல்வி அமைச்சில் 800 வெற்றிடங்கள் உள்ளதாகவும், விரைவில் இதற்கான பரீட்சைகள் நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மரக்கறி எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கஹதுட்டுவ பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் கசிந்து வாகனங்களின் போக்குவரத்திற்கு சிறிது இடையூறு ஏற்பட்டது. விபத்தின் போது சாரதியுடன் உதவியாளரும் உடனிருந்ததால் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக காலி நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு ஒழுங்கை முற்றாக மூடப்பட்டது. கொட்டாவையில் இருந்து பாணந்துறைக்கு மரக்கறி எண்ணெய் மற்றும் சில பொருட்களை ஏற்றிச் சென்ற போது, லொறியின் பின் இடது ரயர் வெடித்ததில் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, குறித்த லொறியில் இருந்த மரக்கறி எண்ணெய் பீப்பாய்கள் வெடித்து சிதறியதால், அதிவேக நெடுங்சாலையின் ஒருபக்க ஒழுங்கையில் எண்ணெய் முழுவதுமாக பரவியுள்ளது. இந்த விபத்தில் லொறி மாத்திரமே பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலையில் உள்ள சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமது வான்பரப்பிற்குள் பல ஆளில்லா விமானங்களை வடகொரியா பறக்கவிட்டதாக தென் கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜியோங்கி மாகாணத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தென் கொரிய வான்வெளியை ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக தெரிவித்தனர். ஐந்தாண்டுகளில் முதல் முறையாக வான்வெளிக்குள் ஊடுருவிய ஆளில்லா விமானங்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவை உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென் கொரிய போர் விமானங்களில் ஒன்றான கே.ஏ.-1 இலகுரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தென்கொரிய இராணுவம் கூறியுள்ளது. இறுதியாக வட கொரியாவின் ஆளில்லா விமானம் ஜூன் 2017 இல் எல்லையைத் தாண்டியபோது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு எம்.பி, மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார். ரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம் அடைந்த நிலையில் இருவரும் எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் மிகக்குறைந்த அளவே கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் பூஜ்யம் புள்ளி அரை சதவீதம் (0.5%) அளவுக்கே கொரோனா பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவ நிபுணர்களும் விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். கடந்த சனிக்கிழமை காலையில் விமான பயணிகளிடம் பரிசோதனை தொடங்கியது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 110 வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று 345 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதிர்ஷ்ட்டவசமாக கொரோனா பாதிப்பு அதிகமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறவுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. . பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி, இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.