நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது. கலந்துரையாடலில் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
Author: admin
அலரி மாளிகைக்கு முன்னாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெகுணவல, இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இன்று (25) பரிந்துரைத்தார். இதற்கமைய தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கொள்முதல் வழிகாட்டலை உரிய முறையில் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட கொள்முதல் செயன்முறையை அமைச்சரின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை அமைச்சரவை முடிவாக இதனை முன்னெடுக்குமாறும் கோப் தலைவர் இங்கு பரிந்துரைத்தார். விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது…
எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3 இராசயனங்களே உள்ளநாட்டில் காணப்படுகிறது. ஏனைய 11 இராசாயனங்களும் வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறதாகவும் தெரிவித்தார். வீடுகளில் முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்காக 26 ரூபாய் செலவிடப்படுகிறது. கிராமிய விவசாயிகள் முட்டை ஒன்றுக்காக 31 ரூபாயை செலவிடுகிறார்கள். எனினும் 20 – 21 ரூபாயை செலுத்தியே விவசாயிகளிடமிருந்து முட்டையைப் பெற்றுக்கொள்கிறார்கள் எனவும் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக் காரணமாக கோழிக உணவுகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைவாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
7,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளைய தினம்(26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார். நாளை(26) கொண்டுவரப்படும் எரிவாயு தொகையை நாளை மறுதினம்(27) முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3,600 மெற்றிக் தென் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை மறுதினம்(27) நாட்டை வந்தடையவுள்ளது. இதேவேளை, குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதன் காரணத்தினால் நாளாந்தம் தமக்கு சுமார் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வௌிநாட்டுப் பயணத் தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் மீண்டும் நீடித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் (25) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த தடையை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதது. குறித்த வழக்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரு முறை அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும் இன்றையதினமும் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில், எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்றையதினம் (25) அழைப்பாணை விடுக்கப்பட்டது. அத்துடன், அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2006 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சற்று முன்னர் தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு இன்னும் 100 மேலான ஆசனங்கள் இருப்பதால், அவர் இராஜினாமா செய்வது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கடசியின் உறுப்பினர்கள், சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் பிரதமர் விவாதிக்கவில்லை என்றும், வேறு எந்தக் கூற்றுகளும் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவளிப்பதாக இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்த உதய கம்மன்பிலவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையை வளமானதாக மாற்றுவதற்கு ஒரு நல்ல கொள்கைத் தளத்தை உருவாக்குவதற்கு சமகி ஜன பலவேகய (SJB) உடன் கைகோர்த்து செயலில் பங்கு வகிக்குமாறு நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தார். நேற்று (ஏப்ரல் 24) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தேசிய நிபுணர்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற “முன்னோக்கி, தேசத்திற்காக ஒன்றுபடுங்கள்” மன்றத்தில் அவர் இந்த அழைப்பை விடுத்தார். “அனைவரும் ஒன்றிணைந்து, நமது ஆற்றல்களையும் ஆற்றலையும் திரட்டி, நமது தாய்நாட்டை இந்த புதைகுழியில் இருந்து மீட்க உறுதியான உறுதியை எடுக்க வேண்டும்” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரப் பேரழிவிற்கு ராஜபக்ச நிர்வாகத்தின் “மாவீரர் வழிபாடு, தொழில்முறை அறிவுரைகளைக் கேட்க மறுப்பது மற்றும் முழங்கால் வினைகள்” என்று அவர் குற்றம் சாட்டினார். சிக்கியுள்ள இந்த பிரமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார். சமூக-சந்தை பொருளாதார அம்சங்கள்…
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 சுயேட்சை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த கிரியெல்ல, பிரேரணை எவ்வாறு முன்வைக்கப்படும், அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து தெரிவித்த மருந்தாளுநர் சங்கத்தின தலைவர் அஜித் திலகரத்ன தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் இருக்க வேண்டிய 1,358 மருந்துகளில் 525 மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவித்தார். அவற்றில் ஆறு உயிர் காக்கும் மருந்துகள், 239 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 280 அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன. ‘குறிப்பாக, இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கையிருப்பில் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன, ஆனால் அதற்கு இன்னும் ஆறு வார கால அவகாசம் தேவைப்படும், என்றார். மேலும் மருத்துவ விநியோகப் பிரிவில் இருக்க வேண்டிய 8,553 சத்திர சிகிச்சைப் பொருட்களில் மொத்தத் தேவையில் 62.9…