தலதா மாளிகை குறித்து விமர்சனம் செய்த சமூக ஊடகர் சேபால அமரசிங்க சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த மதத்தையும் தலதா மாளிகையையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தனர். இதையடுத்தே அவர் சற்றுமுன்னர் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவருக்கு. இவரது 2 மாத குழந்தை ஒன்று தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது அந்த வழியே வந்த குரங்குகள் கூட்டதில், ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கி சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வருவதற்குள். குரங்கு மேற்கூரை பகுதிக்கு சென்று விட்டது. இவர்களும் அதன் பின்னே சென்றுள்ளனர். குழந்தையை பாதுகாக்கும் முயற்சியாக குரங்கை பயமுறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். ஆனால், அது பலன் தரவில்லை. இந்நிலையில், மேற்கூரைக்கு சென்ற குரங்கு குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது. இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு திந்த்வாரி பகுதியில் உள்ள குடும்ப நல மையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பும் இதுபோன்ற, குரங்குகள் கூட்டாக மக்களை…
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு இந்த தோடம் பழங்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3 கொள்கலன்களில் உள்ள தோடம் பழங்களின் மொத்த பெறுமதி 72 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரின் மீன் உற்பத்தியின் மூலம், தேசிய மட்டத்தில் நுகர்வுத் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்கும், ரின் மீன் ஏற்றுமதித் துறையினை மேலும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பாக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் எழுத்து மூலமான கேள்விக்கு இன்று(05.01.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பதில் அளிக்கும்போதே கடற்றொழில் மேற்கண்டாவாறு தெரிவித்தார். மேலும்,“இத்துறை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் உள்ளடங்கியதாக ஒரு கலந்துரையாடலையும் நாம் ஏற்பாடு செய்து சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். மூலப் பொருட்களின் விலைகள், எரிபொருள் விலை உள்ளிட்ட ஏனைய உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக, தற்போதைய நிலையில் ரின் மீன்களின் உற்பத்திச் செலவினமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற…
முட்டை இறக்குமதியின் முதல் கட்டமாக, ஒரு தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் தொகுதி அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளது. இதற்கமைய ஏற்கனவே கல்முனை கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயம் செயற்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய ஆண்டு ஆரம்பமாகி உள்ள நிலையில் கல்முனை தாளவட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அத்துடன் தற்போது கல்முனை பிராந்தியத்தில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணை செய்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரைகளை முன்வைக்கவும் 1996 ஆம் ஆண்டில் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக அதிகாரம் வழங்கப்பட்டு மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அரச நிறுவனம் என்பதை கருத்திற் கொண்டு மக்கள் இத்தகைய முறைப்பாடுகளை செய்ய முடியும்…
லிட்ரோ நிறுவனம் வியாழக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 4,409 (பழைய விலை ரூ. 4,610) அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 1,770 (பழைய விலை ரூ.1,850) மேலும், 2.3 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டர் 38 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 822 (பழைய விலை ரூ. 860)
கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டியில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் குறித்த நபர், கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வெளி இடங்களிலும் இவ்வாறான பல விபச்சார நிலையங்களை இயக்கி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவர் மறைந்த போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று (புதன்கிழமை) காலை கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு (வத்திக்கான் அப்போஸ்தலிக் நன்சியேச்சர்) விஜயம் செய்தார். முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் தனது 95வது வயதில் 2022 டிசம்பர் 31 அன்று வத்திக்கான் நகரில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார், அங்கு அவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013இல் பதவி விலகிய பின்னர் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்தார். பெனடிக்ட், கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்தினார், 2013இல், 1415 இல் கிரிகோரி…