Author: admin

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும் என கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நானும், திகாம்பரமும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினோம். அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மறுத்துவிட்டோம். பதவிகள் எல்லாம் எங்களை தேடிவரும் எனக் கூறினோம். நாட்டின் ஜனாதிபதி நீங்கள், எங்கள் மக்கள்மீது அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தோம். வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப்பிரச்சினையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்றோம். எமது மக்களுக்கும்…

Read More

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் , செட்டிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று ” கெத்து பசங்க” எனும் பெயரில் வட்ஸ் அப் குழு ஒன்றின் ஊடாக தொடர்புகளை பேணி வன்முறை சம்பவம் ஒன்றில் ஈடுபடவிருந்த சமயம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளில் முகநூல் , வட்ஸ் அப் , டிக் டொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்றிணைந்து தமக்குள் தொடர்புகளை பேணி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கடந்த வாரம் யாழ். நல்லூர் அரசடி பகுதியில் வன்முறைக்கு…

Read More

3 மாகாணங்களில் இன்று முட்டைகள் தலா 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சென்று முட்டைகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். ஆனால், சந்தையில் முட்டை 55 ரூபாய்க்கு வாங்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேவேளை, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோருவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எவ்வித நெருக்கடி ஏற்பட்டாலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலுக்கு என மதிப்பிடப்பட்ட தொகையை விடக் குறைவான செலவில் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தலை கடந்த 4 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

பேருந்து கட்டணத்தை திருத்துவது குறித்து தனியார் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. பல நிபந்தனைகளின் கீழ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தை குறைக்கமாட்டோம் என தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்படும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு அனுமதி கிடைத்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்குமாயின் எதிர்வரும் காலங்களில் மின் துண்டிப்பின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவுறுத்தல்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் சட்டத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் மின் கட்டண…

Read More

(எஸ்.எம். எம்.றம்ஸான்) அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவிலிருந்து ஆலிம் சேனை (அஷ்ரப் நகர்), பள்ளக்காடு,தீகவாபி போன்ற இடங்களுக்குச் செல்லும் பிரதான வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் இவ் வீதியின் ஆற்றங்கரைப்பக்கமாக சிதைவடைந்து காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இவ்வீதி சிதைவடைந்து மிக மோசமான ஆபத்தான பாதையாக காணப்படுகிறது. இதை யாரும் கவணிப்பாரற்ற நிலையில் இருப்பது மிக மன வேதனையாகவுள்ளது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெறிவிக்கின்றனர்

Read More

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான பொறுப்பும் அவருடையது என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற போது, தலைமை பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Read More

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை (11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தேர்தல் சட்டங்கள், தேர்தல் இடம்பெறும் விதம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாட்டில் இன்று வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More