தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 31 வயதான தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தார். இதன்போது டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று(வியாழக்கிழமை) இந்த வழக்கை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். அத்துடன், தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு என்பன தொடர்கின்றன. அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள…
Author: admin
”தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. அதன் முதல் நிகழ்வு இன்று கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களிற்கு 18 ஆயிரம் ரூபா பெறுமதியான பவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பவுச்சர்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை தலைவர் சேதுபதி, செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது வழங்கப்பட்ட பவுச்சர்கள் மூலம், மருந்து பொருட்கள், உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் ஊடாக கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நலிந்த குடும்பங்களிற்கான உதவிகள் இவ்வாண்டு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் இங்கு…
—– ( கல்முனை நிருபர்) சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் (HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின், கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி (11)முன்னெடுக்கப்பட்டது. இதில் இளைஞர்கள்,யுவதிகள்,ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர். சமாதான தொண்டர்களான ரி.டிலக்சினி,எம்.எஸ்.றக்சானா,டி.சாலினி எம்.எம்.எம்.அஹ்னாப் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவர்களான எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.டினோசா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன்,இதன் போது வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள் கே.டி.ரோகிணி, எம்.எல்.ஏ.மாஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது. கராச்சி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 101 ஓட்டங்களையும் வில்லியம்சன் 85 ஓட்டங்களையும் னர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நவாஸ் 4 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப் மற்றும் உஸாமா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 262 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182…
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்விற்கு மாணவர்கள் எவ்வாறு சமூகமளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும், மாணவர்களது ஒழுக்கம் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதே அதிபர் மற்றும் ஆசிரியர்களர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. பாடசாலையால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பாடசாலை மாணவர்களின் ஒழுக்க நடைமுறைக்கு மாறாகவும், காதில் தோடு அணிந்தவாறும் மாணவன் ஒருவர் குறித்த நிகழ்விற்கு சமூகமளித்திருத்துள்ளார். குறித்த மாணவனை அவதானித்த அதிபர், மாணவன் அணிந்திருந்த தோட்டினை கழற்விட்டு மாணவர்களின் ஒழுக்கத்துடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து சென்ற மாணவன் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகை…
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்ட போது , அவர்களிடமிருந்து 400 போதைமாத்திரைகள் (40 கார்ட்) மீட்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” இல் பங்கேற்கவுள்ளார். ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 20 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. அண்டை நாடுகளின் தலைவர்கள் தவிர, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் தலைவர்கள், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவுள்ளன. மின்னுற்பத்தி நிலையத்தினை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை ஒரு நாளுக்கு இயக்குவதற்கு சுமார் 9 லீற்றர் நெப்தா எரிபொருள் தேவைப்படுவதாகவும் மின் பொறியியலாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.