Author: admin

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று (13) தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று (120 சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

Read More

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

Read More

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வட கிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

——————- (எம். என்.எம்.அப்ராஸ்) கல்முனை பிராந்தியத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அயராது செயலாற்றி கல்விச் சேவை வழங்கும் கல்வி, கலாசார மேம்பாட்டு தாபனம்(ECDO)மற்றும் கல்வி ஒளி வீசுகின்ற சுயாதீன குழுவினர் மன்றம்( EFIC)கல்வி தாபனங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலும்,கெளரவிப்பு நிகழ்வு கல்முனை அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற காலை ஆராதனை நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள் பங்குபற்றலுடன் கல்முனை பிராந்தியத்தில் சுமார் 20வருடங்களுக்கு மேலாக இலவசமாக மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விசார் நூலகம் நடத்தி வரும் கல்வி கலாசார மேம்பாட்டு தாபனம்(ECDO)மற்றும் கல்வி ஒளி வீசுகின்ற சுயாதீன குழுவினர் மன்றம்(EFIC)ஆகிய இரு அமைப்புக்களை அழைத்து மாணவர்களுக்கு அதன் கல்விச் சேவை தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டதுடன்,இந்நிகழ்வில் கல்வி,கலாசார மேம்பாட்டு தாபனம் (ECDO)தாபனத்தின சார்பாக அதன் நிறுவுனர்களில் பிரதானமானவர்களில் ஒருவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர், செயலாளர் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நபீல்…

Read More

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த நிலையில் ஆதர்ஷா கரந்தன கைது செய்யப்பட்டிருந்தார். ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில், கடனை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, வர்த்தகர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தொழில் முயற்சியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் நேற்று (11) பிற்பகல் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற “பிரதிபா அபிஷேக 2022” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாடு என்ற வகையில் மிகவும் நெருக்கடியான சூழலை நாம் எதிர்கொண்டுள்ள போதும் அந்த சவால்களை முறியடித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு இவ்வருடத்தில் கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கு…

Read More

பெரிய வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் மக்களை கவலையடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 தொன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாட்டின் உள்ளூர் உணவுகளில் வெங்காயம் பிரதானமாக உள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ 11,395.09) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்படுகிறது. இது அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்று பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு…

Read More

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களை நீண்டகால வேலைநிறுத்தத்தில் இருந்து தடை செய்யும் சட்டத்தை சிம்பாப்வே கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். கடந்த வாரம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வாவால் சட்டத்தில் கையெழுத்திடப்பட்டது, ஆனால் புதன்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது, சுகாதார ஊழியர்கள் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதால் மூன்று நாட்கள் வரை வேலைநிறுத்தம் செய்யலாம் என்று சட்டம் நிபந்தனை விதிக்கிறது. வேலைநிறுத்தத்தின் போது சுகாதார வல்லுநர்கள் தொடர்ந்து அவசர சேவைகளை வழங்க வேண்டும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் நிக் மங்வானா ட்வீட் செய்துள்ளார். அண்டை நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜாம்பியா உட்பட பிற நாடுகள், சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களை மட்டுப்படுத்துகின்றன, ஆனால் பணிநீக்கம், பணி இடைநீக்கம் அல்லது ஊதிய குறைப்பு போன்ற குறைவான கடுமையான தண்டனைகளை விதிக்கின்றன. சுகாதார ஊழியர்களின் அடிக்கடி மற்றும் வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தங்கள் பல…

Read More

சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோய்னுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹன்வெல்ல, தெனகமுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான நிலு என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 520 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 202 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் மூன்று வங்கி புத்தகங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More