( எம்.என்.எம்.அப்ராஸ்) ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின்(Samagi Wihidum Balaganaya) திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளராக றிஸ்கான் முகம்மட்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று(15) நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே தலைமையில் இடம்பெற்ற,சமகி வரிசைப்படுத்தல் படையின் மாவட்ட மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்,எதிர்க்கட்சித்தலைவரு மான சஜித் பிரேமதாசாவினால் இந் நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. றிஸ்கான் முகம்மட் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அம்பாறை மாவட்ட செயலாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளிகள் துக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர். நேபாள பிரதமர் திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்தார், மேலும் பேரழிவுக்கான காரணத்தை ஆராய அரசாங்கம் ஒரு விஷேட குழுவை அமைத்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காராவுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 68பேர் உயிரிழந்தனர். யெட்டி எயார்லைன்ஸ் விமானம், விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நூற்றுக்கணக்கான நேபாள மீட்பு பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இருள் காரணமாக இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டது, ஆனால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக, உள்ளூர் தொலைக்காட்சி அறிக்கைகள் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சேதி ஆற்றின் பள்ளத்தாக்கில் தரையில் மோதிய விமானத்தின் எரிந்த பகுதிகளைச் சுற்றி மீட்புப் பணியாளர்கள்…
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெயாங்கொடை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன். 88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம். குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார். அதனடிப்படையில் காவல்துறை மா…
தலவாக்கலை- மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயால் 7 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன. பெரிய மல்லியப்பு தோட்ட இலக்கம் (03) லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (15) 8.20 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதன்போது, 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 12 குடும்பங்களை சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுள் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் , பிரதேசவாசிகள்,தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மலையக எழுத்தாளர்களான மல்லிகை சிவகுமார் மற்றும் கவிஞர் சேழியன் ஆகியோரது வீடுகளும் எரிந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் அதிகமானோர் தோட்டத்தில் நடைபெற்ற…
இன்று (16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் இருந்து கண்டியை நோக்ககி பயணித்த சரக்கு ரயில் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) இரவு 09 மணியலவில் ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்க பாதைக்கு அருகில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிந்துள்ள இளைஞரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருநாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச, அரை அரச மற்றும் தனியார் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்திருப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை மேலும் வெற்றியடையச் செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின்…
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கொரோனா ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்காக வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியாகாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். கெரோனா ஒழுங்குவிதிகளை வெளியிடும் அதிகாரம் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மாத்திரமே உள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (14) தெரிவித்துள்ளது. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்கு பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை, நிதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை நாளாந்தம் சந்தித்து வருகின்றது. இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். இதனால், 2023ம் ஆண்டுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், 5 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார் என பந்துல குணவர்தன கூறுகின்றார். அதேபோன்று, சமூர்த்தி நிவாரண உதவித் திட்டத்தை வழங்கும் நடவடிக்கைகள் இரு வாரங்களுக்கு தாமதமாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார். ”2023ல் நாம் எதிர்பார்த்த அளவை விடவும், கடுமையான நிதிப் பற்றாக்குறையை திறைசேரி எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவைக்கு அறிவித்தார். 2022ம் ஆண்டு பொருளாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டமையே அதற்கான காரணமாகும். வரியின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் என…
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மது விற்கப்படும் அனைத்து உணவகங்கள், பார்கள் மற்றும் வைன் ஸ்டோர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.