தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
Author: admin
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனால் ( பெரியப்பா) குழந்தை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் திட்டம் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம்மானது புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5வருடங்களுக்கு மிகைப்படாமல் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து 5 வருடங்கள் பூர்த்தியாகாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. முக்கியமாக மேற்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் 155 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இங்கிலாந்தில் வெப்பநிலை குறைவதால் கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை அலுவலக மழை எச்சரிக்கைகள் மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கனவே உள்ளன. இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியா முழுவதும் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய எச்சரிக்கைகள், பயண இடையூறு மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரத்தை இழந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் வியாழன் காலை வரை இங்கிலாந்தின் பெரும்பகுதிக்கு இரண்டாம் நிலை குளிர் காலநிலை எச்சரிக்கையை வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ளது, இங்கிலாந்து முழுவதும் குளிர்ந்த நிலைகள் நகரும்.
இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க, எடுத்துச்செல்லும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்லரிகள், தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பசுமைக் குழுக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன. ஆனால் அதைச் செயல்படுத்த வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று பிரிட்டிஷ் டேக்அவே தெரிவித்தது. எடுத்துச்செல்லும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும், ஏனெனில் சிறிய நிறுவனங்கள் அதிக பொதியிடல் செலவுகளை நுகர்வோருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என லங்காஷயரில் ஃபிஷ் அண்ட் சிப்ஸ் உணவகத்தை நடத்திவரும் மற்றும் பிரிட்டிஷ் டேக்அவே பிரச்சாரத்தின் துணைத் தலைவரான ஆண்ட்ரூ க்ரூக் கூறுகிறார். சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான திணைக்களத்தின் மதிப்பீட்டின்படி இங்கிலாந்து ஒரு வருடத்திற்கு 2.7 பில்லியன் கட்லரிகள், பெரும்பாலும் பிளாஸ்டிக், மற்றும் 721 மில்லியன்…
260 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வரவேற்றுள்ளார். மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு குறைவான பாதுகாப்பே வழிவகுத்தது என தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்களை முன்னாள் ஜனாதிபதியும் அவரது அதிகாரிகளும் தடுக்கத் தவறிவிட்டனர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சிறிசேனவும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் தீர்ப்பு குறித்து பகிரங்கக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் முழு உண்மை வெளிவரும்போது தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். முதலாவது தொகை சீருடை தொகையை சீன அரசாங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்வி அமைச்சிடம் கையளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி வரை மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக மக்கள் தமது கருத்துகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்க முடியும் என்பதோடு, அதன் பின்னர் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டறியப்படவுள்ளதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி, ஜனதா சேவக கட்சி, சிங்களதீப தேசிய முன்னணி, புதிய ஜனநாயக மார்க் லெனினிஸ்ட் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் நேற்று பல மாவட்டங்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தவிர நேற்று 11 சுயேச்சைக் குழுக்களும் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளில் எந்தவொரு தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.