ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 42 தொடரூந்து பயணங்களை ரத்து செய்யும் தீர்மானம் இன்று (12) முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுவலக சேவை மற்றும் வழக்கமான பயணங்களில் ஈடுபடும் 42 தொடரூந்து சேவைகள் நேற்று ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று வழமையான சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக சதொச தெரிவிக்கிறது. இதன்படி, சம்பா அரிசி 220 ரூபாவுக்கும், வெள்ளை பச்சையரிசி 189 ரூபாவுக்கும், வெள்ளை நாடு 198 ரூபாவுக்கும், மா 240 ரூபாவுக்கும் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிலோமீற்றராக காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து புத்தளம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களுக்கு அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது சுற்றுலா வீசா மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இலங்கையர்கள், மற்றும் வீசா இரத்து செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை 97126316444 / +971 263 46481 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, தகவல்களை பதிவு செய்யுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.
யூரியா உரம் விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே அரச ஊழியர்களுக்கான டிசெம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். கடந்த சிறுபோகம் மற்றும் இந்த முறை பெரும் போகத்திலும் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்த விவசாய அபிவிருத்தி திணைக்களம் 1000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டார். கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட அந்த நிதியின் ஒரு பகுதியை அரச ஊழியர்களின் டிசெம்பர் மாத சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் பயன்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி கூட்டுறவு சங்கத்தின் காரியாலயத்துக்கு முன்பாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின் மூலமாக கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள பரவலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விண்ணப்பித்த போதிலும் பல மாத காலமாக அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது,ஆசிரியர்களது நலனுக்காக உருவாக்கப்பட்ட குறித்த சங்கத்தில் ஆசிரியர்களது நலன்களுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் அரசியல் லாபத்திற்காக மாத்திரமே குறித்த நிறுவனம் தற்போது இயங்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் நிர்வாக குழுவிற்கான காலை இல்லை முடிவடைந்த போதிலும் இன்னமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் எவரும் தெரிவு செய்யப்படாமையானது தமக்கு மிகுந்த வருத்தத்தை தெரிவிப்பதாகவும் வெகுவிரைவில் புதிய நிர்வாக குழுவானது கூடி அதன் மூலம் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற நிதி தொடர்பான குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள்…
8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு 47 வயதான ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள பாடசாலையொன்றில் அக்கடிதத்தில் ” இதனைப் படித்ததும் கிழித்து விட வேண்டும்,யாருக்கும் காட்டக் கூடாது, விடுமுறை நாட்களில் உன்னை மிஸ் செய்வேன் , விடுமுறை வருவதற்குள் என்னை வந்து சந்தித்து விடு” இவ்வாறு எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில்,பெற்றோர் தனது மகளிடம் மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளனர். எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த ஆசிரியர் சிறுமியை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் மனுவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(11) அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2018 மே மாதம் பிரதிவாதிகளான குசும்தாச மஹானாம மற்றும் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட குசும்தாச மஹானாமவுக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், 65,000 ரூபா அபராதமும் விதித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது