அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணக் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் ஒருவாரத்துக்கு தொடருமென அறிவித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் நேற்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் சிறு சுகாதார பணியாளர்களும் நேற்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Author: admin
சீனாவினால் இலவசமாக வழங்கப்பட்ட டீசலை விநியோகிப்பதற்கு 12.2 கோடி ரூபாய் வரை அரசாங்கத்துக்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெல் அறுவடைக்காக சீனாவினால் வழங்கப்பட்ட 6.8 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணியை விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். டீசலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக அரசாங்கத்தினால் 12.2 கோடி ரூபாய் செலவாகும் என்றார். அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை விவசாயம் செய்யும் நெல் விவசாயிகளுக்கு டீசல் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இரண்டரை ஏக்கர் அல்லது ஒரு1 ஹெக்டேயரில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு 15 லீற்றர் எரிபொருள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்கமைய, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அனைத்துக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று (24) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படட பின்னர் அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் தென் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
——— (எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஷ்ரப்கான்,எம்.எம்.ஜபீர் ஏ.எல்.எம்.ஷினாஸ்) ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனின் அனுசரணையில் அறம் வலையமைப்பு நடாத்திய மாபெரும் “அறிவுச்சுடர்” போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும்,கலை நிகழ்ச்சியும் அந்நிறுவனத்தின் தலைவியும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவியும் சட்டத்தரணிமான மர்யம் மன்சூர் நளிமுடீனுடைய தலைமையில் நேற்று (21)சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலையத்துக்கு உட்பட்ட எட்டு தேசிய பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட “அறிவுச்சுடர்”போட்டித்தொடரில் புள்ளிகள் அடிப்பைடயில் முன்னிலை வகித்த முதல் மூன்று பாடசாலைகளின் மாணவக்குழுக்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும்,பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை சுற்றுத்தொடரில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அறிவுச்சுடர் சுற்றுத்தொடரில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியும் (தேசிய பாடசாலை)இரண்டாமிடத்தை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும்(தேசிய பாடசாலை) மூன்றாமிடத்தை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை)மாணவர்களும் சுவீகரித்துக்கொண்டனர். நிகழ்வில் அதிதிகள் வரிசையில் அறம் வலையமைப்பின்…
க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி இரவு 7.00 மணிக்கு பின்னர் மின் வெட்டை அமுல்ப்படுத்த வேண்டாமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், இன்றும் வழமை போன்று பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின் உற்பத்தி தொடர்பில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த மின்வெட்டு காலத்தை தொடர வேண்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போதைய சூழலில் மின்சார சபையிடம் அந்தளவு நிதி இல்லை எனவும், அவசியமான நிதி வழங்கப்பட்டால், மின்வெட்டை அமுல்ப்படுத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், ஜனாதிபதி அடங்கலான அமைச்சர் மற்றும் இதர மின்சார சபை அதிகாரிகளுக்கிடையே மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில்…
சீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மாலைத்தீவு, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய 20 நாடுகளுக்கு, சீனர்கள் வெளிச்செல்லும் முன்னோடித் திட்டத்தை சீன கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. 3 வருடங்களின் பின்னர் வெளியாகிய இந்த அறிவிப்பில், இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில், சீனர்கள் 155 மில்லியன் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். குறித்த செங்குத்தான வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும் ‘பீ’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரான்ஸின் செரிபோன்டைன் கிராமத்தில் கடையொன்றை நடத்தி வந்த முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.