இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 3,740 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்லொன்று நேற்றிரவு (30) நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Author: admin
இரண்டு கட்டங்களின் கீழ் 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (30) தெரிவித்தது. செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஒக்டோபரில் 66 சதவீதமாக குறைவடைந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஒக்டோபர் மாதத்தில் 85.6 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், உணவு அல்லாத பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் பணவீக்கம் ஒக்டோபரில் 56.3% ஆக காணப்பட்டதுடன், நவம்பரில் 54.5% ஆக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2021 அக்டோபரில் இருந்து மேல்நோக்கிய போக்கைப் பின்பற்றிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், கடந்த ஒக்டோபரில் முதல் தடவையாக கீழ்நோக்கிய போக்கைக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்…
வாதுவை பகுதியில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, சுமார் நான்கு அடி நீளம் கொண்ட இராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்னைப்பர் துப்பாக்கியை போன்று ஒரு துப்பாக்கியை தயாரித்த ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர் எனவும் தெரிவியவந்துள்ளது. கழிவு பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளிப்பாகங்கள், ஸ்பிரின், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கி மற்றும் பைனாகுலர் ஆகியனவற்றை தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூனைகள், நாய்கள் மற்றும் பறவைகளை இந்த துப்பாக்கியினால் சுட்டதாகவும், சுடப்பட்ட பறவைகள், விலங்குகள் அதே இடங்களில் வீழ்ந்து இறந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும் சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாயாலும் கீரி சம்பா 15 ரூபாயாலும் பெரிய வெங்காயம் 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளன. ஒரு கிலோ கிராம் நெத்தலி கருவாடு 1150 ரூபாய்க்கும் சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாய்க்கும் கீரி சம்பா 225 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று (30) பிரசாந்த டி சில்வா மற்றும் கே. கே. அந்த. பி. ஸ்வர்ணதீபி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் அமர்வு முன் அழைக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, உணவுப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து முட்டைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்று, நுகர்வோர் சேவை அதிகாரசபையானது முட்டைக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலையை மீள்பரிசீலனை செய்யும் என்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார். அதன் பின்னர், அது தொடர்பில் கவனம் செலுத்திய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், மனுவை டிசம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அலுவலகங்களுக்குச் செல்லும் போது அரச ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்துகொள்வதற்கு வாய்ப்பளித்து வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 2019 ஜூன் 26 மற்றும் 2022 செப்டெம்பர் 27 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (8 இலட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாவை வைத்திருக்க இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில்இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டெ்ாலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதில் இருந்து மீள இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாயை வெளிநாட்டு பணமாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (8 இலட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம். இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக…
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். இதனிடையே, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ.குஷான் என்பவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் அவர் நேற்று(29) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் செயலாளர் ஈ. குஷான் என்பவர் நேற்று(29) அதிகாலை 3.55 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.