பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார். இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் இந்தியாவில் இருந்து வரும் காற்றால் , கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது. மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
க.பொ.த உயர்தர தரம் 2021 பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பட்டப்படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள் என பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு தெரிவான மாணவர்களை பதிவு செய்யுமாறு குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். மாணவர்கள் அந்தந்த பட்டப்படிப்புகளுக்கு பதிவு செய்ததன் பின்னர் வெற்றிடமான பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று (08) காலை 09.00 மணி நிலவரப்படி இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரித்துள்ளது. காற்றுத் தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 என பதிவான பத்தரமுல்ல, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கு ‘மெஜந்தா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), கேகாலை (87), மற்றும் தம்புள்ளை (84) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது, NBROவினால் ‘ஊதா’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இது காற்றின் தரக் குறியீட்டில் 44 மற்றும் 43 ஐ பதிவு செய்த பின்னர், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற அளவுகள் குறித்து எச்சரிக்கிறது. இந்தியாவிலிருந்து வரும் மாசுபட்ட காற்று, காற்றின் மூலம் இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாகவும், அதனால், இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும்…
வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை , ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிவு ஏற்பட்டு பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது. நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் (07) இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதே வேளை கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது. வலப்பனை பிரதேசத்தில் ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால் வீதியோரங்களில் பாரிய மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இராகலை புரூக்சைட் பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் வீழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்துடன் உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உடப்புஸ்ஸல்லாவ கல்கட…
கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அதிகளவு வளி மாசடைவதால் அவதானமாக இருக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது. சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளின் போது முகக்கவசத்தை அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார். காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவியேற்றார். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அவர் முந்தைய நாள் சட்டமன்றத்தை தற்காலிகமாக’கலைத்து ஆணை மூலம் ஆட்சி செய்யும் திட்டத்தை அறிவித்தார். இது, பெருவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என்று காஸ்டிலோ கூறினார், ஆனால் இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது துணை ஜனாதிபதி போலுவார்டே உட்பட மற்றவர்களால் சதிப்புரட்சி முயற்சி என்று பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது. இதனால், எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து, துணை ஜனாதிபதி டினா பொலுவார்டேவை பொறுப்பேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கமைய அவர்…
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இன்று(08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களை பாதித்துள்ள வரவு – செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க கூறியுள்ளார். மேலும், சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் சில நாட்களுக்கு முன் இறந்துள்ளமையும், சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக உருவாகியுள்ளது. இது டிசம்பர் 09 இரவு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலைக் கடந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையைக் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (08) வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.