நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றராக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Author: admin
1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு, இன்று (10) அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் பேராசிரியருமான ஆஷூ மாரசிங்கவினால் தனது நாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி ஆதர்ஷா கரந்தனா தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், செவ்வாய்க்கிழமை (10) நிராகரித்தார். பேராசிரியர் ஆஷூ மாரசிங்கவின் முறைப்பாட்டுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டால், தன்னை முன் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட கோரி ஆதர்ஷா குறித்த பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார். பிணை விண்ணப்பதாரரின் கோரிக்கை தற்போதைக்கு ஏற்பது பொருத்தமானது அல்ல என்று அறிவித்த நீதவான், பிணைக் கோரிக்கையை நிராகரித்தார். ஆஷூ மாரசிங்கவின் காதலி என்று கூறப்படும் ஆதர்ஷா, தனது நாயை ஆஷூ மாரசிங்க பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்ததுடன், அதுகுறித்த வீடியோவையையும் பகிர்ந்திருந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்தே ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷா, குறித்த விடயத்தை அறிவித்த நிலையில், அந்த விடயம்…
மறு அறிவித்தல்வரை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கவேண்டாம் என சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்
இன்று மதியம் 13.25 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியாவுக்கு அருகாமையில் சாந்தசோலை எனும் இடத்தில் வைத்து இனந்தெரியாத இரண்டு மர்ம நபர்களால் பேரூந்துக்கு கல்லால் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பேரூந்தின் முன்பக்க வலதுபுற கண்ணாடி சேதமடைந்துள்ளது. பேரூந்தின் சாரதிக்கு கல் தாக்கி கண்ணாடி துவல்களும் உடம்பில் கீறி கிழித்துள்ளது. சாரதி உடனடியாக வவுனியா அரசாங்க வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கே முக்கியத்துவமளிக்கப்படும். எனவே இது தொடர்பில் பயம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்றதையடுத்து புதிய அதிபரொருவர் நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்க இருந்தார். எனினும் குறித்த அதிபர் முன்பு கடமையாற்றிய பாடசாலையில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தாம் அறிந்தமையால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவரை பாடசாலை அதிபராக ஏற்க முடியாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வேண்டாம் வேண்டாம் தகுதியற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அதிபர் வேண்டாம் போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பழையமாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்தி கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்படுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அரசாங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிள்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை சடலம் குறித்த பகுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தவிர அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியும், கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சி கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளது. இதேவேளை, இன்று மேலும் மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை வைப்பிலிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று காலை அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், பிற்பகல் திருகோணமலை மாவட்டத்திலும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.