Author: admin

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பாடசாலையில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளார். உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்த நிலையில். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸா் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. குறித்த பாடசாலையில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மாத்திரமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும்…

Read More

வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

Read More

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், சனிக்கிழமை (07) தெரிவித்தார். கல்வி அமைச்சின் இறுதி அனுமதியை அடுத்து பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளபோதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார். இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பெப்ரவரியில் டுபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டை நிறுத்திக் கொள்ள போகிறேன். டுபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி டுபாயில் பெப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.எனக் கூறியுள்ளார். சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார். கலப்பு இரட்டையர் பிரிவிலும்…

Read More

திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் தம்மலசூரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டை பாவனையாளர்களின் தகவல்களை சேகரித்து, 90 கடன் அட்டைகள் மூலமே 55 இலட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். கணினி, கமெரா, உணவு, மதுபானம் உள்ளிட்ட பொருட்களை அந்த பணத்தின் மூலம் அவர் வாங்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

இந்த வருடம் முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த கொடுப்பனவு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாயாக கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து கமலதாசன் என்பவரே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி தேயிலை மலைப்பகுதிக்கு கொழுந்து ஏற்றச்சென்ற லொறி சாரதி, இது தொடர்பில் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்ததை அடுத்து தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர். இரவு பத்து மணிவரை வீடு திரும்பவில்லையென பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைபாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில், தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தின் உதவி முகாமையாளரினால் உயிரிழந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து முச்சக்கரவண்டியையும்,…

Read More

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கையில் இருந்து 3500 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனித ஹஜ் யாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதற்காக சவுதி அரசாங்கத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த முறையை போன்று வயது எல்லை தொடர்பிலான வரையறைகள் இம்முறை இல்லையெனவும் கொரோனா தடுப்பூசி தொடர்பிலான வரையறைகளும் இம்முறை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய சரத் ரத்நாயக்க, இன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More