எதிர்வரும் 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவௌி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். ஏனைய மார்க்கங்களின் ரயில் நேர அட்டவணையும் கட்டம் கட்டமாக திருத்தியமைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். திணைக்களத்தில் காணப்படும் 8,000 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்ட போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதில்…
Author: admin
ரஷ்யாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான சோம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ” சோம்பி வைரஸ்” மூலம் மேலும் ஒரு தொற்றுநோய் குறித்த அச்சத்தை ஆய்வாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். “பழங்கால அறியப்படாத வைரஸின் புத்துயிரால் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விlயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும்” என்று “வைரஸ்” ஆய்வு கூறுகிறது. ஆய்வு அறிக்கையின்படி, புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றும் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம், இதுபோன்ற சூழ்நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர்…
விவசாய அமைச்சின் மேலதிக ஊழியர்கள் அனைவரும் செலவு மேலாண்மை குறித்த அரசாங்க கொள்கையின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இது குறித்த அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். இதன்படி, விவசாய அமைச்சில் நீண்டகாலமாக கடமையாற்றும் மேலதிக செயலாளர் உட்பட பல திணைக்கள அதிகாரிகள் வேறு நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு கூறுகிறது. தற்போது விவசாய அமைச்சில் 03 அபிவிருத்திப் பிரிவுகள், 03 கட்டுப்பாட்டுப் பிரிவுகள், 03 கணக்கியல் பிரிவுகள் மற்றும் 03 போக்குவரத்துப் பிரிவுகள் உள்ளதோடு, பெருமளவான அதிகாரிகள் கடமையின்றி இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக்கியது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இது தவிர பணியிடங்கள் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்த சூழலில் கடந்த 24 ஆம் திகதி ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த கட்டிடம் பாதியளவு பூட்டப்பட்டிருந்ததால் மக்கள் உடனடியாக வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தாக குற்றம் சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த போராட்டம் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியது. தலைநகர் பீஜிங்,…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று (29) அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. இதனை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில், சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கெமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராவார். இச்சம்பவமானது தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை…
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, இந்த விடயம் குறித்து தெரியவந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே, அதனை தடுப்பதற்கான விரைவான தீர்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாளை நவம்பர் 30 அன்று 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளில் பணம் செலுத்தி பல்கலைக்கழகக் கல்வியைப் பெற வேண்டும் என்றும் ஆனால் இலங்கை மாணவர்கள் தமது முதல் பட்டப்படிப்பை எமது நாட்டில் இலவசமாகப் பெறுவது பெரும் பாக்கியம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவே, கூடிய விரைவில் கல்வியை முடித்து சமூகத்தில் தமது பொறுப்பை நிறைவேற்றுவதே பல்கலைக்கழக மாணவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் படிப்பை முடிக்காமல், 8 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகங்களில் தங்கியிருப்பதால், புதிய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்புகளை இழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் நீண்டகாலம் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களும் உரிய தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர்…