நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Author: admin
(எம்.என்.எம்.அப்ராஸ்,யூ.கே.காலித்தீன்,ஏ.எல்.எம். ஷினாஸ்) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை) (2023) இல்ல விளையாட்டு போட்டியில் நிஸ்ரின் இல்லம் சம்பியனானது. கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் (தேசிய பாடசாலை) இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் கல்லூரி மைதானத்தில் அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் (17) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க,கெளரவ அதிதியாக கல்முனைபிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்,கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்சின் பக்கீர்மற்றும் அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சபினா இம்தியாஸ், கல்முனை பொலிஸ் நிலைய பலவித குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.ரபீக்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆகியோர் கலந்து கொண்டனர். இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள்,அணிநடை,மைதான கண்காட்சி,வினோத உடை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவிகளுக்குசான்றிதழ்கள், பதக்கங்கள் வெற்றிக் கிண்ணங்கள் என்பன கலந்து கொண்ட…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு பச்சை அரிசி 1 கிலோ- 08 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) 1 கிலோ- 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சம்பா (உள்நாடு) 1 கிலோ – 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) 1 கிலோ – 09 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) 1 கிலோ – 08 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா 1 கிலோ – 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு பருப்பு 1 கிலோ – 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. காய்ந்த மிளகாய் 1 கிலோ – 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.…
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளரும், சிங்கள மொழிக் கலைஞருமான சுதத்த திலகசிறி கொழும்பு – கோட்டையில் உண்டியல் குலுக்கி பணம் சேகரித்துள்ளார். திரட்டப்பட்ட 1,810 ரூபாய் பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்துள்ளார். நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்தும் அளவுக்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக்கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை என பாராளுமன்றத்தில் அவர் நேற்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், பாடசாலையில் இருந்த மாணவர்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது
மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தடுக்க முற்படுமாக இருந்தால், மீண்டும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாட்டில் ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்தினால் மாதாந்தம் 9.5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அவருக்கு 15 முதல் 20 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு, இவ்வாறான செலவுகளை ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. தற்போதைய ஜனாதிபதிதான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்காக பல சலுகைகளை வழங்கியுள்ளார். இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டு மக்களுக்கு போதுமான உணவு இல்லாத இந்த நேரத்தில், மின்சாரக் கட்டணம் 400 வீததத்தால் உயர்வடைந்துள்ள இந்த நேரத்தில், மத்திய தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இவ்வாறான அநாவசிய செலவுகளை அரசாங்கம் செய்து…
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில், சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இளைஞனை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை…
(எஸ். எம். எம்.றம்ஸான்) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை யில் 2022 ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத வேண்டிய எதிர் வரும் காலங்களில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை ஆசிர்வதிக்கும் விழா பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நல்ல தம்பி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணையாளர் எம்.கோபாலரட்னம் பிரதம அதிதியாகவும்,|மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட விஞ்ஞான ஆய்வு நிலையத்திலிருந்து ஒய்வு பெற்ற பணிப்பாளர் என்.புல்லிநாயகம் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து விஷேட அதிதியாகவும் பாடசாலையின் முன்னாள் அதிபர் வி.பிரபாகரன் உட்பட ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பாடசாலையின் அதிபர்கள்,பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள்,அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து கௌரவித்துடன் பல துறைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு கௌரவமும் நினைவச்சின்னமும்…
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) உள்ளிட்ட அதிகாரிகள் இப்பால்மாவை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர். நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்கு இப்பால்மா, மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கூடாக பகிர்ந்தளிக்கப்படும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் தலைவரும் ஆலோசகருமான கலாநிதி சுரேன் படகொட கருத்து தெரிவிக்கையில், அனைத்து பிரஜைகளுக்கும் அவசியமான போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் நோக்கமெனத் தெரிவித்தார். மிகவும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு போஷணை தேவையை ஈடுசெய்வதே இதன் பிரதான குறிக்கோளென்றும்…
அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொஸ்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று(18) காலை தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, களனிவெளி ஊடான ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.