மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
Author: admin
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது பதவியை நேற்று (புதன்கிழமை) இராஜினாமா செய்துள்ளார். இதன்படி அவரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை நேற்று (புதன்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும் கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய செயலாளர் நாயகம் (பட்ரிசியா ஸ்கொட்லண்ட்) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அந்த வகையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார். அத்துடன் பெப்ரவரி 3 திகதியன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் அவர் விரிவுரை ஆற்றவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டை விட்டு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அத்துடன், தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நிதியை கடன் மூலம் பெறுவதற்கு இரண்டு அரச வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் வசதிகளின் அளவுக்கேற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்தளவிலான துண்டிப்பு நேரங்களுடன் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதத்துக்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரண்டு கப்பல்கள் இந்த மாதத்துக்குள் வருகைதரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நுரைச்சோலை மின்நிலையத்துக்கு தேவையான 33 நிலக்கரி சரக்குகளில் 10 இறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரியில் மேலும் 2 கப்பல்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேகேசர தெரிவித்திருந்தார். பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாதாந்தம் தலா 7 கப்பல்களை வருகைதரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணங்க, 21 கப்பல்கள் வருகைதரவுள்ளன. இலங்கை மின்சாரசபையிடம்…
கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ரீதியாகவும் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை – 153 வெட்டுப்புள்ளிகளாகவும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 150 வெட்டுப்புள்ளிகளாகவும் அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148 வெட்டுப்புள்ளிகளாகவும் நுவரெலியா, திருகோணமலை – 147 வெட்டுப்புள்ளிகளாகவும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145 வெட்டுப்புள்ளிகளாகவும் கேகாலை 144ம் வெட்டுப்புள்ளிகளாகவும் வெளியாகியுள்ளது. இதேவேளை 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 25, 2023 இரவு 10:48 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன & www.doenets.lk இல் பார்க்கலாம். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெளியிடப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே தமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனவே, அங்கு தனித்து போட்டியிடும் வகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தம்மால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போலியான முறையில் வேட்பு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது போலியான கையெழுத்துடன், குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கான வேட்பு மனுவொன்றில் தனது போலி கையெழுத்திட்ட ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 260 இற்கு அதிகமான மக்கள் தினந்தோறும் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதுடன், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாக வாரத்துக்கு ஒரு முறையே சிறிய நீர் தாங்கியில் நீர் நிரப்பி வழங்கப்படுகின்றது என மக்கள் குறிப்பிடுகின்றனர். “நீர் வளம் மிக்க மலையகத்தில் எமக்கு நீர் குடிநீர் கிடைக்காமை வேதனையளிக்கின்றது. நீரை பெறுவதிலேயே பாதி நாள் போய்விடுகின்றது. எப்படிதான் நாம் வாழ்வது.” என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நீர்வழங்கல் அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜீவன் தொண்டமான், எமது குறையை தீர்ப்பார் என நம்புகின்றோம். எமக்கான குடிநீர் திட்டத்தை வழங்குமாறு உரிமையுடன் ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும்…
தேர்தல் நடவடிக்கைகளுக்கு போதியளவு உதவிகளை வழங்குமாறு கோரி மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா கோரிக்கை விடுத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இதுதொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.