கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் நேற்று (06) பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை குறித்த வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள் மூவருடன் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் பொலிஸார் என கூறி வீட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். சந்தேகநபர்கள் குறித்த நபர்களை மண்டியிடச் செய்து அவர்களிடம் இருந்த தங்க வளையல், 02 தங்க மோதிரங்கள், 02 தங்க சங்கிலிகள், 02 பென்டன்ட்கள், 355,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் ஏனைய சொத்துக்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட சொத்தின் பெறுமதி 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Author: admin
ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் விநியோகம் தடைபட்டு இருப்பதால், பல இடங்களில் அவசரகால மின்தடை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். உறைபனி நிலவும் பல பகுதிகள், மின்தடையால் மீண்டும் இருளில் மூழ்கியதாகவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருவதால், இதனை போர்க்குற்றம் என்றும் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். உக்ரைனின் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லடி நெச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகனான அகிலன் துஷ்யந்தன் (18) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததனால் அதனை கேட்டு அவரின் தந்தை திட்டியதாகவும், அதனையடுத்து மனமுடைந்த மாணவன் கடந்த 5ஆம் திகதி தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து, சம்பவத்தைக்கண்டு தூக்கில் இருந்து மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு…
தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார். கண்வில்லைகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அரச மருந்து களஞ்சியசாலையிலும் இதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பாடசாலை சிறுவர்கள் சட்ட விரோதமாக தென்கொரிய நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா இராணுவத்தினர் அவர்களிடம் மேற்கொண்ட. விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை பிறப்பித்துள்ளார். அதன்படி அந்த நாட்டில் சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, இணைய தளத்தை பார்க்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசு அனுமதித்த இணைய தளங்களை மாத்திரம் பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால்…
மாளிகாவத்தை – ஜயந்த வீரசேகர மாவத்தையில் நேற்று (06) நபரொருவர் இரும்புக் குழாய்களால் தாக்கி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் காயமடைந்த மாளிகாவத்தையை சேர்ந்த 44 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார். நீண்ட நாட்களாக நிலவி வந்த விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாகப் பாதித்தது என்பது பரவலாகவே அறியப்பட்ட தகவல்தான் ஆனால், அது மனிதனின் அறிவாற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது. கொரோனா பாதித்த பலருக்கும் மூளையின் செயற்பாட்டில் ஒரு மந்தம் அல்லது சுணக்க நிலை இருப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதாவது, ஒரு தகவலை நினைவில் வைப்பது, ஒரு செயற்பாட்டில் கவனம் செலுத்துவது, தினந்தோறும் செய்யும் வேலைகளை நினைவூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தது பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகிறது நீண்ட அல்லது கடுமையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலை காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மாதக்கணக்கிலும் சிலருக்கு வருடக் கணக்கிலும் இந்த பாதிப்பு உள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயற்பாட்டை பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.…
கொத்மலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலையொன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை- பூண்டுலோயா பிரதான வீதியின் கொத்மலை வெவஹேன சந்தியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு கலால் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரி்ன் தலையீட்டுடன் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர் என்கிற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கஞ்சா கலந்த 354 கிராம் பாபுல் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை நாளை (08) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைவடையக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவிற்கான விலையை கணிசமான அளவு அதிகரித்திருக்க வேண்டும். எனினும், நுகர்வோர் நலன் கருதி நட்டத்தை ஏற்றுக் கொண்டு 250 ரூபாவால் மாத்திரம் விலையை உயர்த்த தீர்மானித்தாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.