ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட tமற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, முற்பணம் சார்ந்த வருமான வரியை ஆட்சேபித்து இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Author: admin
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். நாட்டில் நிலவி வரும் மருந்து தட்டுபாட்டை நீக்குவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை அமைத்து, இந்த குழுவின் ஊடாக இந்த மருந்து தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்கு தெளிவாக கூறியிருந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் பெரிய வைத்தியசாலைகள் தொடக்கம் சிறிய வைத்தியசாலைகள் வரை இந்த மருந்து தட்டுபாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைழைய தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான தீர்வை முன்வைக்க தவறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை…
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2022 டிசெம்பர் 1 ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, புத்தளம் பத்தலங்குண்டுவவிலிருந்து 03 டிங்கி படகுகள் மூலம் மாற்றப்பட்ட 64 சட்டவிரோத குடியேற்றவாசிகளை டிசெம்பர் 13ஆம் திகதி ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்தது. ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற குழுவினரை ஜனவரி 14ஆம் திகதி கைது செய்த அந்த தீவின் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட குழுவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனவரி 25ஆம் திகதி அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் படகில் பணிபுரிம்…
அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை – கல்கிஸை மாநகர சபையின் உறுப்பினரான ரஞ்சன் டி சில்வா 2018 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ‘கொட்டியா’ என அழைக்கப்படும் மலிது லக்மால் என்ற சந்தேக நபர் நேற்று (25) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரத்மலானை கோனகோவில மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன், பரீட்சை இடம்பெற்ற மதியம் எந்தவொரு பிரதேசத்திலும் மின்சாரத்தை துண்டிக்கவில்லை எனவும், ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது வேறு ஏதேனும் தவறு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இரவு வேளைகளில் தொடர்ந்து மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதிக்கான அனைத்துத் தேவைகளையும் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். அதேநேரம் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழைப் பெற்ற பின்னர் எதிர்கால செயற்பாடுகள் நிறைவு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 205 ரூபாவாகக் குறைந்துள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் தொன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசித்த பின்னர் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலமாக இன்னும் ஒருவாரத்தில் விற்பனை தொடங்கும். மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் விற்பனை நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைத்திருப்பதும் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, 2023 மே 16ஆம் திகதி பரிசீலனைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இது தொடர்பான மனு இன்று (25) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு டாக்டர் சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கலாநிதி சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கலாநிதி ஷிஹாப்தீன் தனது மனுவில், தாம் கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு கணிசமான காரணத்தையும்…