மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் தென் மாகாணத்தில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Author: admin
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும், உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2,200 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யக்கூடியதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு காலநிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்னல் மற்றும் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பரிதாபகரமான உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உணவகத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும் , உணவகத்தின் சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த உணவகத்தினை 42நாட்களின் பின்னர் மீள திறக்க நீதிமன்று அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி காணப்பட்டதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. அதனை அடுத்து குறித்த கடைக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து கடையினையும் சோதனையிட்டார். அதன் போது கடை மற்றும் சமையல் கூடம் என்பவை பல்வேறு சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்டது. அதனால் குறித்த கடைக்கும் அதன் சமையல் கூடத்திற்கும் எதிராக தனித்தனியே யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை அடுத்து வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரையில் கடையையும் , சமையல் கூடதினையும்…
சமுர்த்தி பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு, மாதாந்தம் 10 கிலோ கிராம் அரிசி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. குறைந்த வருமானம் பெறுவோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 61,600 மெட்ரிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (16) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது
பிலியந்தலை – பெலென்வத்த பகுதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெண்ணை கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படை சிப்பாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், பின்னர் அதனை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட பெண்ணுக்கு சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கடத்தல் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் 255 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ராகலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு குழந்தை காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 16 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் பேருந்திலிருந்து தவறி விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் தலவத்துவன பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலும், பத்தேகம – ஹம்மாலியா பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனம் மோதியதில் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 31…