யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார். சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Author: admin
இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று தெரிவித்தார். இலங்கை அரசாங்கமும் மக்களும் முகங்கொடுக்கும் சிரமங்களை சமாளித்து பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெய் கூறினார்
ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து இராஜினாமா செய்வதாக அஸீஸ் நிசாருதீன் ஜனாதிபதிக்கு கடிதம்..! மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01. மேதகு ஜனாதிபதி அவா்களுக்கு, இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இந்நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனா். உங்கள் அரசாங்கத்தின் மீது தமது எதிா்ப்புகளை காட்டுவதற்கு பொதுமக்கள் நாளுக்கு நாள் வீதிகளுக்கு இறங்கி வருகின்றனா். எாிபொருள், பால்மா, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மின்சார துண்டிப்பு, உணவுப்பொருள்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகின்றனா். இன, மத, கட்சி பேதங்களை மறந்து இந்நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி வீதிகளில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். நாட்டின் இந்த அவல நிலைக்கு காரணம் அரசாங்கம் மேற்கொண்ட தூர நோக்கற்ற செயற்பாடுகளே என்பதை மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாா்கள். ஆனால் ஜனாதிபதியான நீங்கள் காலம் கடந்து அந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளீா்கள்.…
இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டர்லினா ஜோர்ஜிவா மற்றும் இந்திய நிதியமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மாத்திரமின்றி சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு உதவ முன்வருவது அவசியம் என்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு விரைவில் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டர்லினா ஜோர்ஜிவா உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு சுயாதீன வல்லுநர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேருக்கு தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, உயிரிழப்புகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், காயமடைந்தவர்கள் தொடர்பில் விரைவாக சிகிச்சைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் போராட்டக்காரர்களின் உண்மையான குறைகளை கருத்தில் கொண்டு காவல்துறையும் ஆயுதப்படைகளும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2022 வரை எங்களால் முன்வைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. இந்நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 8 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறாது என்ற ஓர் செய்தியும் பரவலாக அறியப்படக்கூடியதாக இருக்கிறது. முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் செய்றபாடுகளுக்காக கடந்த 18 ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை. அவ்வாறான தகவல்கள் வெளிவருமாக இருந்தால் எமது அயாஹ் எப்.எம் செய்தி குழுவில் பதிவிப்படும். பொய்யான தகவல்களையும் செய்திகளையும் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். மேலும் நாட்டின் நெருக்கடியை கவனத்தில் கொண்டு பாடசாலை மாணவர்கள் பாதுகாப்போடும் அவதானத்துடனும் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷட் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது. 2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில் உள்ள ஒருவர் அவரது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 5,972 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, நபர் ஒருவரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பது கொழும்பு மாவட்டத்திலாகும். அது 6,482 ரூபாவாகும். இந்த பட்டியலில் குறைந்த பெறுமதி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதம் ஒன்றுக்கு 5,623 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.