அவசர காலச் சட்டம் என்றால் என்ன? இயற்கை அனர்த்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற நாட்டில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசாங்கத்தினால் சாதாரண சட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கருதும் போது, அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்படும். பாதுகாப்பு விடயங்கள், பொருளாதார விடயங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் அரசாங்கத்திற்கு சாதாரண சட்டங்களின் ஊடாக அதனை சமாளிக்க முடியாத நிலைமை வரும் போது, மேலதிகமான அடக்குமுறை சட்டமே, இந்த அவசரகால சட்டமாகும். ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளின் படி ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிதேசத்திலோ அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பார். அப்படியான அறிவித்தல் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். கால நீடிப்பு நாடாளுமன்றத்தால் தேவை ஏற்பட்டால் தீர்மானம் மூலம் செய்யப்படும். இந்தக் காலத்தில் பத்திரிகைகள்…
Author: admin
சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும். இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி (சிங்கள/தமிழ்) நடைமுறைப் பரீட்சைகளில் இன்று (06) தோற்ற முடியாமல்போன பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படும் – பிரதமர்.
பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்
தற்போது பண்டாரவளை நகரில் பொதுமக்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகரின் பல இடங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பாரிய வெள்ளைநிறப் பதாகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில் ‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ என எழுதப்பட்டுள்ளது. அந்தப் பதாகையில் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டு வருவதுடன் அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி கோஷமெழுப்பிக் கொண்டுள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியா லங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர் மின்சாரத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார். இது தொடர்பில் மகாவலி அதிகார சபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் இழந்த இந்தக் கொள்ளளவை சமனலவெவ மற்றும் லக்ஷபான நீர் மின் நிலையத்திலிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்…
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியை அண்மித்த பாராளுமன்ற நுழைவு வீதியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) தனது கண்டன ஊர்வலத்தை நேற்று மாலை அந்த இடத்தில் நிறைவு செய்தது. நேற்று மாலையும் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போதிலும், அவர்கள் எதிர்த்தனர், இறுதியில் புதிய போராட்ட தளத்தை அமைத்தனர். அதன்பின்னர் பல பொதுமக்கள் IUSF ஆர்ப்பாட்டத்தில் இரவிலும் இன்று காலையிலும் இணைந்து கொண்டனர், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அந்த இடத்தில் கூடினர். இலங்கை பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில் பொலிஸாரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் ஆண் மற்றும் பெண் உள்ளாடைகளின் காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் தேசிய மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என, 2022-05-03 திகதியிடப்பட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பொய்ப் பிரச்சாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.