இலங்கை பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு டிசெம்பரில் 57.2% ஆக இருந்ததை ஒப்பிடுகையில் 2023 ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) உணவுப் பொருட்களின் விலையில் ஒரு வருடத்திற்கு முந்தைய வருடத்தை விட 60.1% உயர்வை பிரதிபலித்துள்ளது. 2023 ஜனவரி மாதத்திற்கான அனைத்து பொருட்களுக்கான CCPI 24..3 ஆக இருந்தது மற்றும் குறியீட்டு புள்ளிகளில் 1.1 அதிகரிப்பைப் பதிவு செய்தது. மின்சார விலையில் அதிகரிப்பு இல்லை என்றால், அடுத்த மாதம் பணவீக்கம் 51.9% ஆகவும் மார்ச் மாதத்திற்குள் 50% க்கும் குறைவாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
மொறட்டுவை – ராவதாவத்தை, 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ மிக வேகமாக பரவி வருகின்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தீக்கான காரணம் வெளிவராத நிலையில்குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. மனிதநேய கண்ணிவெடி அகற்றும் டாஸ் நிறுவனத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிற்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றுவது தொடர்பிலும், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது பயிற்றுவிக்கப்படுகிறது. ஜப்பான் மக்கள் மற்றும் அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த பணியாளர்கள் மனிதநேய பணியில் ஈடுபடவுள்ளனர். குறித்த பகுதியில் அம்மனிதநேய பணியில் இதுவரை 400 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், இந்த பயிற்சியின் ஊடக மேலும் 70 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்க சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 158.7 பில்லியன் ரூபாய்களையே அரசாங்கம் வரிகளாக பெற்றுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவீனம் 367.8 பில்லியன்கள் என குறிப்பிட்டுள்ளார். குறித்த செலவீனமானது ஜனவரி 27 ஆம் திகதி வரையானது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9% ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார பகுப்பாய்வு தரவுகளின்படி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அடுத்த ஆண்டு அது 3.1% ஆக உயரும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 455 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து ஜனவரி 31 மாலை வரை வடமேற்காக பலமாக நகர்ந்து பின்னர் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் திரும்பி 2023 பெப்ரவரி 01 ஆம் திகதி காலை இலங்கையின் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்குரோத்து நாடு என்று இலங்கைக்கு குத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என்றும் அடுத்த சில மாதங்களில் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவரும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், கடனை மீளச் செலுத்துவதன் மூலம் முதலீடுகளை கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். முதலீடுகள் மூலம் சம்பளம் அதிகரிப்பதுடன், வரிகள் மற்றும் வங்கிகளின் வட்டிவீதங்களும் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்துக்கா எப்போதும் உழைத்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி என்றும் ஒவ்வொரு முறையும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதும் நாடு முன்னேறியது என்றும்…
கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் வைத்து கடந்த 17ஆம் திகதி கழுத்து அறுத்து கொலை செய்யத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (30) உத்தரவிட்டார். இன்றைய நீதவான் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவியின் தந்தையின் சாட்சியம் பிரதான நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதுடன், நீதவான் விசாரணை பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை.
பிரபல ஊடகவியலாளர் எஸ்.என் .நிபோஜன் தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊடக அலுவலுக்காக காலிக்கு சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த சமயம் தெஹிவளையில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.