Author: admin

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த வருட தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றாதது விசேட அம்சமாகும்.

Read More

குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால், நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில்50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

ஒரு நாடு என்ற வகையில் சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 75 ஆண்டுகளாக நமக்கு அனுபவத்தை வழங்குகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பாக இலங்கை சமீபகாலமாக அடைந்துள்ள பொருளாதார மந்தநிலை, நாட்டின் வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் பாரதூரமான நிலைமையாகும்,மேலும் முறையான முற்போக்கான வேலைத்திட்டங்கள் இன்றி அதிலிருந்து மீள்வது கடினம். குறுகிய இனவாதம் மற்றும் வகுப்புவாதத்தில் சிக்கிக் கொள்வது உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வழி அல்ல, உண்மையான சுதந்திரத்தை அடைய அனைவருக்கும் சம உரிமையுள்ள குடிமக்களாக நாம் ஒன்றுபட வேண்டும். அனைத்து குடிமக்களின் தேவைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன், வேற்றுமையில் ஒற்றுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அந்த வகையில்,ஒரு காலனித்துவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் சாதிக்க வேண்டிய பல விடயங்களும் உள்ளன. அதற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணிக்க…

Read More

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது. இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.

Read More

75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும், தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் சுதந்திர தின வாழ்த்து செய்தியினை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ” கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும் கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி நாம் துரிதமாக நகர வேண்டும் இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம். உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர…

Read More

சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலி முகத்திடல் போராட்டக்காரர்களினால் மருதானையில் இன்று மாலை சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். இதேவேளை, சுதந்திர தினத்திற்கு தடை ஏற்படும் வகையில் போராட்டங்கள், பேரணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவகளின் அமைப்பின் (AZ Zuharian Past Pupils Association) ஒன்று கூடலும் எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற ஏற்பாடாகி வரும் இல்ல விளையாட்டுப் போட்டி (House meet ) தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலும் எதிர்வரும் சனிக்கிழமை (04.02.2023) பிற்பகல் 04.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகியிருப்பதனால் இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவ மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். என அவ்வமைப்பின் தலைவர் மற்றும் செயளாலர் வேண்டிக் கொள்கின்றார்கள்.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Read More

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு நிறைவடைந்தது. புதிய அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More