உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்றைய தினம் தேர்தலுக்கான தினம் குறித்து அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
Author: admin
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உயர்தர பரீட்சையின் போது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை சட்டத்தின்படி, கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புளூடூத் சாதனங்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வர பரீட்சார்த்திகளுக்கு அனுமதி இல்லை. கொண்டு வர அல்லது பரீட்சார்த்திகளின் வசம் வைத்திருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய சாதனங்களை பரீட்சார்த்திகள் சென்றடையக்கூடிய அல்லது அணுகக்கூடிய இடங்களில் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்யப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம். ஓர் இடத்தில் அமர்ந்து பேசினோம். மற்றுமோர் இடத்துக்குச் சென்றோம். அங்கு வைத்தும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். நான், என் காதலியை சூட்டி என்றே அழைப்பேன். “சூட்டி” என்னை மனநோயாளி என கூறிக்கொண்டே இருப்பாள். அதனால்…
தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இன்று(19) இதனைக் கூறினார். இது தொடர்பில் அந்த அதிகாரிகளில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில், குறித்த அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவர்கள் சுயாதீனமான முறையில் செயற்பட இடமளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை, இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று கூறினார். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்க அரசாங்கம் மறைமுக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
பாணந்துறை – பண்டாரகம வீதியில் அலுபோமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கார் வீடொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று யுவதிகளும், மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைவதுடன், க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்னநாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல எனவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினை வாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று (18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த பயணத்தை நிறைவு செய்து இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவி பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.