வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய இலவச எச்.ஐ.வி பரிசோதனைகள் இந்த வாரம் இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொவிட் தொற்றுநோய்களின் போது கைவிடப்பட்ட நோயறிதலை மேம்படுத்துவதற்கான அரசாங்க உந்துதலின் ஒரு பகுதியாகும். ‘கிட் லெட்டர்பாக்ஸ்’ மூலம் பொருந்தும் அளவுக்கு சிறியது மற்றும் தபால் மூலம் வெற்று பொதிகளில் வருகிறது. ஒரு விரலில் இருந்து ஒரு துளி இரத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் 15 நிமிடங்களுக்குள் இது ஒரு முடிவை அளிக்கிறது. ‘எதிர்வினை’ முடிவு என்பது எச்.ஐ.வி சாத்தியம் மற்றும் மருத்துவ பரிசோதனை தேவை. இதை ஏற்பாடு செய்ய ஆதரவும் உதவியும் கிடைக்கும். முடிவு எதிர்மறையாக இருந்தால், சோதனையில் எச்.ஐ.வி கண்டறியப்படவில்லை என்று அர்த்தம். நீங்கள் எச்.ஐ.வி ஆபத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும், ஏனெனில் வைரஸ் இரத்தத்தில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். இங்கிலாந்தில் சுமார் 4,400 பேர் கண்டறியப்படாத எச்ஐவியுடன் வாழ்கின்றனர், இது கடுமையான உடல்நல…
Author: admin
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் மீட்பு பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அது தவறும் பட்சத்தில் மோசமான நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமை மேலும் மோசமடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.
பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் துறையினர் ஒரு லீட்டர் திரவப் பாலை 160 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர், அதே நேரத்தில் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சமையல் எரிவாயுவிலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே ஏராளமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் விலையை திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்திருந்தது. விலையை திருத்தம் மேற்கொள்ளப்பட்டாவிட்டால் மீதமுள்ள சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்படலாம் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 2,112 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 845 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்கள் சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகே நீராடச் சென்றிருந்ததாகவும் இதன்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போதைய அரசாங்கம் தவறான கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதாகவும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ராஜபக்ஷ குடும்பம் இந்நாட்டை அழித்து வறிய நிலைக்கு இட்டுச் சென்றதாகவும்,சிறு குழந்தை முதல் முதியவர் வரை,அரச ஊழியர் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வீழ்ந்துள்ளதாகவும்,இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் இனி எந்த ஆட்சியாளருக்கும்,தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைகள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ராஜபக்ஷவின் அடிமைத்தனத்தை இன்னமும் உறுதிப்படுத்தும் மொட்டு யானை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதல் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பாணந்துறையில் சனிக்கிழமை (4) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார். உலகில் எந்த நாடும் பொருளாதாரத்தை சுருக்கி பிரச்சினைகளைத் தீர்த்ததாக…
யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் நிஷாந்த தர்ஷன ஹதுங்கொட துபாயிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கணினி குற்றப்பிரிவின் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இவர் துபாயிலிருந்து நேற்று இரவு (5) 09.55 மணிக்கு Emirates விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகையின் முன்பாக இருந்து பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரலையாக நிகழ்ச்சியை ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார். அறிவித்தார். இந்த நிலையில், இரண்டு தடவைகள் கொழும்பு கணினி குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் தர்ஷன ஹதுங்கொட டுபாய் சென்ற நிலையிலேயே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.