சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாடுகளின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் மக்கள் விரும்பத்தகாத சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இதனால், சர்வதேச கடன் வழங்குநரிடமிருந்து சாதகமான முடிவுகளையும் நிலையான பொருளாதாரத்தை விரைவில் அடைய முடியும் என்றும் அதற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
கண்டியில் புகையிரத குடியிருப்புக்குள் நுழைய முயன்ற நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்களை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுகன்னாவ பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த நபர் கடந்த 13 ஆம் திகதி புகையிரத உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைய முற்பட்ட போது, வீட்டில் இருந்த இரு யுவதிகள் பயந்து அலறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழையந்த கையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த கீழே விழுந்து காயங்குக்கு உள்ளாகியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவரை தாங்கள் தாக்கவில்லை என்றும், அவர் குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டலில் காசாளராக இருந்த இளைஞர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், கடந்த இரண்டரை வருடங்களாக ஹோட்டலில் பணிபுரிந்து வந்தவர். நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் ஹோட்டல் வியாபாரத்திற்காக மூடப்பட்டிருந்த போதிலும், அதிகாலை 2.00 மணியளவில் மாடியில் காயமடைந்த நிலையில் இளைஞரைக் கண்டதாக ஹோட்டலின் ஊழியர் ஒருவர் கெஸ்பேவ பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்ததன் பின்னர் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அனுமதிக்கப்பட்ட பின்னர் முன்னாள் நபர் உயிரிழந்ததாகவும் ஊழியர் மேலும் கூறினார். சம்பவத்திற்கு பல மணித்தியாலங்களுக்கு முன்னர் குறித்த இளைஞன் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…
இன்றைய தினம் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் மகாவலி நீர் முகாமைத்துவ செயலகத்தினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தலுக்கு அமைய இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மேலதிக நீர் விடுவிக்கப்பட்ட காரணத்தினால், நேற்றும்(31), நேற்று முன்தினமும் (30) மின் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உள்ளடக்கப்படுவதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அதன்படி, 2023 மார்ச் 29, வரை இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. 176 விசேட வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பின்னர், மனு மீதான விசாரணை மார்ச் 24, 28, 29 ஆகிய திகதிகளில் ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மின்சார கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஒத்திகை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (01) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை காலை 05 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலை மையமாகக் கொண்டு 20 வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அவர் கூறினார். கொழும்பில் (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களுடன் மதத் தலைவர்களிடமும் ஆசி பெற்று தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுப்பதை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார். பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.